வரலாறு காணாத அளவுக்கு உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை..!

0
The price of gold reached an all-time high-Gold And Silver Price

சமீப காலமாக மக்களுக்கு தங்கத்தின் மேல் இருக்கும் மோகம் அதிகமாக உள்ளது. இதன் விளைவாக தங்கத்தின் விலை உயர்ந்தே காணப்படுகிறது.

இந்நிலையில், சில மாதங்களாகவே தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடனே காணப்பட்டு வருகிறது. அந்த வகையில், சில நாட்களுக்கு முன் தங்கத்தின் விலை ரூ.38 ஆயிரத்துக்கும் கீழே விற்ற நிலையில் கடந்த 11 ஆம் தேதி திடிரென உயர்ந்து 39 ஆயிரத்தை தாண்டியது.

இந்நிலையில், நேற்றைய நிலவரப்படி ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4901-க்கும் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ.39,208-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த சூழ்நிலையில் மீண்டும் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.

அந்த வகையில், இன்றைய நிலவரப்படி ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ.312 அதிகரித்து ரூ.39,520-க்கும் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.39 அதிகரித்து ரூ.4940-க்கு விற்கப்படுகிறது. இதேபோன்று வெள்ளியின் விலையும் தற்பொழுது அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி, ஒரு கிராம் வெள்ளியின் விலை 80 காசுகள் அதிகரித்து ரூ.68.50-க்கு விற்கப்படுகிறது.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here