உச்சத்தை தொட்ட தங்கம்…! இன்னைக்கு தங்கத்தோட விலை என்னென்னு தெரியுமா?

The price of gold reached the peak Do you know the price of gold today-Gold And Silver Price

கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை சற்று ஏற்ற இறக்கத்துடனே காணப்படுகிறது.
இந்நிலையில், மத்திய அரசு ஜூலை முதல் நாள் தங்கத்திற்கான இறக்குமதி வரியை உயர்த்தியதாக தெரிவித்தது. மத்திய அரசு கொண்டு வந்த இறக்குமதி வரியின் மூலமாக தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்தது.

இந்நிலையில், தற்பொழுது தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்து உச்சத்தை தொட்டுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் சூழல்கள் காரணமாக தங்கத்தின் விலை உயர தொடங்கியுள்ளது. ஒரு சரவன் தங்கத்தின் விலை 40 ஆயிரம் ரூபாயை கடந்துள்ளது.

கடந்த மாதம் 4,600 ஆக இருந்த ஒரு கிராம் தங்கத்தின் விலை தற்பொழுது, ஒரு கிராம் 5,010 ரூபாயாக உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை கிராமுக்கு 55 ரூபாய் உயர்ந்து ரூ.5,010 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் 440 ரூபாய் உயர்ந்து ரூ.40,080 ஆக உள்ளது. வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி விலை 70 காசுகள் உயர்ந்து ரூ.70.50 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை 700 ரூபாய் உயர்ந்து ரூ.70,500 க்கு விற்பனையாகிறது. இதனால் தங்கம் வாங்குபவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here