மீண்டும் உயர்ந்த தங்கத்தின் விலை..! ஏன்?

0
The price of gold rose again. Why-Gold And Silver Price

சமீப காலமாக மக்களுக்கு தங்கத்தின் மேல் இருக்கும் மோகம் அதிகமாக உள்ளது. இதன் விளைவாக தங்கத்தின் விலை உயர்ந்தே காணப்படுகிறது.

இந்நிலையில், சில மாதங்களாகவே தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடனே காணப்பட்டு வருகிறது. மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன் அதாவது ஜூலை மாதம் தங்கத்திற்கான இறக்குமதி வரியை உயர்த்தியது. இதன் காரணமாக தங்கள் விலை அதிரடியாக உயர்ந்தது. இதனால் கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில், கடந்த 16 ஆம் தேதி 1 சவரன் தங்கம் ரூ.39,760-க்கு விற்கப்பட்டது.

இந்த சூழ்நிலையில், சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 4 ரூபாய் உயர்ந்து 4,935 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதே போல தங்கத்தின் விலை சவரனுக்கு 32 ரூபாய் உயர்ந்து 39,480 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தங்கத்தின் விலை உயர்ந்துள்ள அதே நேரத்தில் வெள்ளியின் விலை இன்று சற்று குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 காசுகள் குறைந்து 68 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை 200 ரூபாய் குறைந்து 68 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here