கடந்த சில மாதங்களாக நமது அத்தியாவிசய பொருளான கோதுமை மற்றும் அரிசிக்கு இந்தியாவில் கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில், பல்வேறு மாநிலங்களில் நியாய விலை கடைகளில் மூலமாக வழங்கப்படும் கோதுமை மற்றும் அரிசி தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் எந்தவித தட்டுப்பாடும் இல்லாமல் வழக்கம்போல் கோதுமை மற்றும் அரிசி வழங்கப்படிருகின்றன.
இந்நிலையில், தற்போது போதுமான அரிசி கொள்முதல் இல்லாமல் விவசாயிகள் கவலையில் இருகின்றனர். அதாவது, திருவையாற்றுப் பகுதிகளில் விவசாய நிலங்களுக்கு தேவையான தண்ணீர் பருவமழையின் அளவு குறைந்து விட்டதால் கிடைக்கவில்லை. அதனால், 50 சதவீத டன் நெல் உற்பத்திக் கூட கிடைக்குமா என்கிற நிலை தற்போது உருவாகியுள்ளது.
இதன்படி, நெல் உற்பத்தி இனிவரும் மாதங்களில் போதுமானதாக இருக்காது எனவும், தமிழகத்தில் அரிசிக்கு கடும் தட்டுப்பாடு நிலவலாம் எனவும் தகவல் கிடைத்திருக்கிறது. மேலும், அரிசியின் விலை உயர வாய்ப்பு இருக்கலாம் என்று விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.