
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வெங்காயத்தின் விலை அதிகரித்து வரும் நிலையில் தமிழ்நாடு அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது.
தமிழகத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் வெங்காயத்தின் விலை உயர்ந்து வருகிறது எனவே அரசு பசுமை பண்ணை கடைகள் மூலம் வெங்காயத்தை குறைந்த விலைக்கு விற்பனை செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக காய்கறிகளின் விலை உயர்ந்து வருகிறது. அதிலும் வெங்காயத்தின் விலை பெரிதும் அதிகரித்து உள்ளது ஒரு கிலோ சின்ன வெங்காயத்தின் விலை கிலோ ரூ.200 வரை உயர்த்து உள்ளது. அதே போல் பெரிய வெங்காயத்தின் விலை ஒரு கிலோ ரூ. 100 – க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகை இன்னும் சில தினங்களில் வர உள்ளது எனவே வெங்காயத்தின் தேவையும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. மேலும் இதனால் மக்களுக்கு பொருளாதார ரீதியாக பெரும் சிரமம் ஏற்பட்டு உள்ளது.
ALSO READ : மீண்டும் தொடரும் இலவச ரேஷன் திட்டம்!
அதோடு வெங்காய உற்பத்தியில் மகாராஷ்ட்ரா முதல் இடத்தில் உள்ளது. ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்ட்ராவில் இருந்து வெங்காயம் கோயம்பேடு சந்தைக்கு கொண்டு வரப்படுகிறது. சராசரியாக ஒரு நாளைக்கு 7 ஆயிரம் டன் வரத்து இருந்தால் விலை சீராக இருக்கும். அதேசமயம் வரத்து குறைய தொடங்கினால் வெங்காயம் விலை மீண்டும் ஏற தொடங்கி விடும். இதனை தொடர்ந்து தமிழ்நாடு அரசு வெங்காயம் விலை உயர்வை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் படி “ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பாதிப்படையாமல் இருக்க எளிய கூட்டுறவு துறையின் மூலமாக சென்னையில் செயல்பட்டு வரும் 10 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மற்றும் 4 நடமாடும் விற்பனை வாகனங்கள் என 14 மையங்கள் மூலம் அன்று (05.11.2023) முதல் வெங்காயம் விற்பனை செய்யப்படுகிறது”.
அதன் தொடர்பாக கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.கேஆர்.பெரியகருப்பன் கூறுகையில் “தற்போது உள்ளூர் சந்தையில் ஒரு கிலோ ரூ.60 முதல் ரூ.70 வரை விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், கூட்டுறவுத்துறையின் மூலமாக பண்ணை பசுமை காய்கறி கடைகள் மூலம் கிலோ ஒன்றிற்கு ரூ.30/- வீதம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் தமிழ்நாட்டில் உள்ள பிற பகுதிகளிலும் வெங்காயம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இன்னும் குறுகிய காலத்திற்குள் வெங்காயம் விலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும்” என்றும் கூறினார். ஏற்கனவே, தக்காளியின் விலை உயர்ந்த போது பொது மக்களின் தேவையை கருத்தில் கொண்டு அரசு ரேஷன் கடை வாயிலாக கிலோ ரூ.50 க்கு விற்பனை செய்தது குறிப்பிடத்தக்கது.