இந்தியாவில் பெட்ரோல், டீசலின் விலை குறைவு! உங்களுக்கு தெரியுமா?

சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்து வருகின்றனர்.

The price of petrol and diesel in India is low! do you know read more details here

அந்த வகையில், தமிழகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு முதலே பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது 100 ரூபாய்க்கும் அதிகமாக தான் விற்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வந்ததே இந்த பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணமாக இருந்தது. அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.110.25 காசுக்கும், ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ.102.59 காசுக்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை சற்று குறைக்கப்பட்டது.

அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.102.63 காசுக்கும், ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ.94.24 காசுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், தற்பொழுது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்துள்ளது. ஆனால் தற்பொழுது வரை பெட்ரோல் மற்றும் டீசலின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. கச்சா எண்ணெயின் விலை குறைந்துள்ளதால் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசலின் விலையை குறைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.


RECENT POSTS IN JOBSTAMIL.IN