உலக நாடுகளை அச்சுறுத்தும் அரிசியின் விலை! இப்படியே போனா நிலைமை என்னாகுறது? தவிக்கும் மக்கள்…!

Today latest News in Tamil 2023

Today latest News in Tamil 2023

தேசிய அளவில் அரிசியின் விலை உயர்ந்து வருவதைக் கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு, இந்தியாவில் இருந்து அரிசி ஏற்றுமதிக்கு கடந்த ஜூலை 20-ஆம் தேதி தடை விதித்தது. இதுமட்டுமல்லாமல், புழுங்கல் அரிசிக்கு 20 சதவீத ஏற்றுமதி வரி விதிப்பை அமலுக்கு கொண்டு வந்தது. மத்திய அரசு, பாசுமதி அரிசியின் ஏற்றுமதி விலையாக டன்னுக்கு 1,200 டாலர் என நிர்ணயித்துள்ளது. மத்திய அரசின் இச்செயலால், உள்ளூர் சந்தைகளில் அரிசியின் விலை கட்டுபாட்டிற்குள் வந்தது. இதுமட்டுமின்றி, கடந்த மாதம் புழுங்கல் அரிசியின் விலை டன் ரூ.39 ஆயிரத்தில் இருந்து தற்போது ரூ.32 ஆயிரமாக குறைந்துள்ளது.

இந்தியாவில் இருந்து அரிசி ஏற்றுமத்திக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், உலகச் சந்தையில் அரிசி விலை டன் 700 டாலராக உயர்ந்துள்ளது. அரிசி உற்பத்தியில் முதல் இடத்தில் இருக்கும் தாய்லாந்து நாட்டின் அரிசி விலை டன் 670 முதல் 690 டாலர் வரை உயர்ந்துள்ளது. இதுமற்றுமின்றி, 5 சதவீத உடைந்த குருணை அரிசியின் ஏற்றுமதி விலை டன் 534 டாலரில் இருந்து 646 டாலராக உயர்ந்துள்ளது.

இதேபோன்று, வியட்நாமில் ஏற்றுமதிக்கான அரிசியின் விலை டன் 489 டாலரில் இருந்து டன் 504 டாலராக உயர்ந்துள்ளது. இதனால் இந்திய அரசிடம் இருந்து நேரடியாக அரிசி இறக்குமதி செய்ய, மலேசிய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

பாகிஸ்தானில் ஏற்றுமதி அரிசியின் விலை டன் 608 டாலர் முதல் 612 டாலராக உயர்ந்துள்ளது. மத்திய அரசு, உள்ளூர் சந்தைகளில் அரிசி விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையால், உலக சந்தைகளில் அரிசி விலை உயர்ந்துள்ளது.