மாணவர்கள் எதிர்பார்த்த அந்த திட்டம்..! தொடங்கி வைத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

தமிழக மாணவர்களின் நலனை காக்க தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவற்றில் மிக முக்கியமான திட்டம்தான் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் தொடங்கப்பட்ட காலை உணவு திட்டம். தமிழக அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் பயிலும் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தின் மூலம் அவர்களுக்கு உணவு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். முதலில் இந்த திட்டம் ஒரு சில மாவட்டங்களில் மட்டுமே செயல்படுத்தப்பட்ட நிலையில், இன்று(ஆகஸ்ட் 25) தமிழகம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்படும் என்று தமிழக முதல்வர் அறிவிப்பை வெளியிட்டார்.

The project that students expected Tamil Nadu Chief Minister M.K.Stalin started read it now

அதன்படி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காலை சிற்றுண்டி விரிவாக்கத் திட்டத்தை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பயின்ற திருக்குவளையில் பள்ளியில் இன்று(வெள்ளிக்கிழமை) தொடங்கி வைத்தார். அப்போது, மாணவர்களுடன் அமர்ந்து, முதலமைச்சர் கிச்சடி உண்டு மகிழ்ந்தார். சென்னை திருவல்லிக்கேணியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு சிற்றுண்டி பரிமாறியதோடு, அவர்களுடன் அமர்ந்து காலை சிற்றுண்டியை உண்டும் மகிழ்ந்தார்.

Also Read : தேசிய திரைப்பட விருதை பெற்ற படம் எதுன்னு தெரியுமா? தெரிஞ்சா ஆடிபோயிடுவீங்க…

மேலும், இந்த திட்டத்தின் மூலம் 1.14 லட்சம் மாணவ மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். அதோடு காலை உணவு திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள பள்ளிகளில் மாணவர்களின் வருகைப்பதிவு அதிகரித்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.