ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்திய ரிசர்வ் வங்கி! விலைவாசி உயர வாய்ப்பு!!!

0

RBI Increased Repo Rate By 50 Basis Points: அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ரெப்போ விகிதத்தை 0.5% அதாவது 50 அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டில் ரிசர்வ் வங்கி தொடர்ந்து நான்காவது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளது. இதனால் கடந்த மூன்றாண்டுகளில் இல்லாத வகையில் ரெப்போ விகிதம் இப்போது 5.40% லிருந்து 5.90% ஆகவும், SDF விகிதம் 5.15% லிருந்து 5.65% ஆக உயர்ந்துள்ளது.

The Reserve Bank has raised the repo interest rate 0.5%

RBI Increased Repo Rate By 50 Basis Points
RBI Increased Repo Rate By 50 Basis Points

முன்னதாக, MPCயின் பரிந்துரைகளின் அடிப்படையில், மே மாதம் 4.40 சதவீதம், ஜூன் மாதத்தில் 4.90 சதவீதம், ஆகஸ்ட் மாதத்தில் 5.40 சதவீதம் என 3 முறை ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் மீண்டும் 0.5 சதவீதம் உயர்த்தப்பட்டு ரெப்போ விகிதம் 5.90 சதவீதமாக அதிகரித்துள்ளது. அந்த வகையில் நடப்பு நிதி ஆண்டில் மே முதல் செப்டம்பர் வரையில் மொத்தமாக 1.4 சதவீத ரெப்போ விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.

ரெப்போ விகிதம் என்பது ரிசர்வ் வங்கியின் கீழ் செயல் படும் வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டி விகிதமாகும். தற்போது ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை உயர்த்தியுள்ளதால், அதன் கீழ் இயங்கும் வங்கிகளும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டியை விகிதத்தை அதிகரிக்கும்.

இதனால் வீட்டுக் கடன், வாகனக் கடன், கல்விக் கடன், தனிநபர் கடன், வணிகக் கடன், கிரெடிட் கார்டுகள், அடமானங்கள் போன்ற அனைத்து வகையான கடன்களுக்கான வட்டியும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. கடன்கள் மீதான வட்டி விகிதம் அதிகரிப்பதால் மக்களின் வாங்கும் திறன் கடுமையாக பாதிக்கப்பட்டு, உற்பத்தி மற்றும் விநியோகத்தை சீர்குலைக்கும் என அஞ்சப்படுகிறது.

RECENT POSTS:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here