தமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளி மாணவர்கள் மற்றும் அரசு பள்ளி மாணவர்கள் என பல்வேறு தகுதி அடிப்படையில் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழக அரசு சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி உதவித்தொகை இரண்டு மடங்காக உயர்த்தப்படும் என கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அறிவிக்கப்படிருந்தது.

இந்நிலையில், தமிழக அரசின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி உதவித்தொகை இருமடங்காக உயர்த்தப்படும் என்று அரசாணை தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. மேலும், குறைந்தபட்சமாக மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையாக ரூ. 72,000 முதல் 7 லட்சத்து 14 ஆயிரம் வரை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதைனையடுத்து, இந்த புதிய திட்டத்தின் மூலமாக 22,300 மாணவர்கள் பயன்பெறலாம் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.
Also Read : தமிழக மீனவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட மாஸ் அறிவிப்பு!! உடனே பாருங்க…
அதாவது, 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 1000 ரூபாய் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 2000 ரூபாய் வழங்கப்படும் எனவும், 6 முதல் 8 ஆம் வகுப்பு மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 6000 ரூபாய் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 8000 ரூபாய் மற்றும் பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு 12000 ரூபாயும், தொழில் கல்வி மற்றும் முதுகலை பட்டம் பெறும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 14,000 ரூபாயும் கல்வி உதவித் தொகையாக வழங்கப்படும் என தமிழக அரசு வெயிட்டுள்ளது.