
தமிழக மக்களின் நலனை கருத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதிலும் குறிப்பாக பெண்களுக்கு கல்வி முக்கியம் என்பதை உணர்த்தும் வகையில் அவர்களுக்கு கல்வி உதவித்தொகைகளையும் அரசு வழங்கி வருகிறது.அதுமட்டுமல்லாமல் ஏழை, எளிய மற்றும் நடுத்தர பெண்கள் எந்தவொரு சூழ்நிலையிலும் வீழ்ந்துவிட கூடாது என்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் “கலைஞர் மகளிர் உரிமைத் தொகை” திட்டத்தை கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கி வைத்தார்.
மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூலம் தேர்வு செய்யப்பட மகளிரின் வங்கி கணக்கில் ஒவ்வொரு மாதமும் ரூ.1000 வரவு வைக்கப்படும். இந்த திட்டத்தின் முதல் கட்டத்தில் தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 1 கோடியே 63 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், அவர்களின் தகுதியுடையவர்களாக 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ரூ.1000 வழங்கப்பட்டது.
ALSO READ : Pondicherry Universityயில் அருமையான வேலைவாய்ப்பு! மாதம் ரூ.35000 சம்பளத்தில்!
இந்நிலையில், இந்த திட்டத்தில் விண்ணபித்தவர்களில் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் உரிய காரணத்துடன் மேல்முறையீடு செய்து கொள்ளலாம் எனவும், இதுவரை இந்த திட்டத்தில் விண்ணபிக்காதவர்களும் இதன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழகம் முழுவதிலும் இருந்து தற்பொழுது வரை சுமார் 11.85 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்தில் மேல்முறையீடு செய்தவர்கள் மற்றும் புதிதாக விண்ணப்பித்தவர்களின் விண்ணபங்கள் தற்போழுது பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதில், தகுதியுடையவர்காளாக தேர்வு செய்யப்பட்ட மகளிருக்கு உரிமைத் தொகை தீபாவளி பண்டிகைக்கு முன்கூட்டியே வழங்குவது குறித்து நேற்று ஆலோசனை நடத்தப்பட்டது. அதன்படி, 2 ஆம் கட்ட மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் நவம்பர் 10 ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.