மாணவர்களுக்கு சற்றுமுன் வந்த ஷாக் நியூஸ்..! மிஸ் பண்ணாம உடனே பாருங்க…

The shock news that came to the students a while ago Dont miss it and watch it now full details here click now

இந்தியாவில் சிபிஎஸ்இ பள்ளிகளுடைய பாட புத்தகங்கள் தொடர்பான ஆலோசனைகளை என்.சி.இ.ஆர்.டி எனப்படும் “தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சில் பள்ளிக் கல்வி” என்கிற அமைப்பானது அளித்து வருகின்றது. மேலும் இந்த அமைப்பானது, பாட புத்தகங்களையும் தாயாரித்து வருகின்றது. இதனையடுத்து, சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் மற்றும் சில மாநில கல்வி வாரியங்களானது அப்பாடப் புத்தகங்கள் அனைத்தையும் பயன்படுத்துகின்றது.

இதற்கிடையே கொரொனோ காலகட்டத்தின்போது, புதிய தேசியக் கல்விக் கொள்கை திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு பாடச்சுமையை குறைக்க திட்டமிடப்பட்டது. அதன்படி 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை உள்ள பாடத்திட்டங்களில் ஒரு சில பகுதிகளானது நீக்கப்பட்டிருந்தன. அதைத்தொடர்ந்து அரசியல் அறிவியல் பாடப் புத்தகத்தில் இருந்து மகாத்மா காந்தி மற்றும் கோட்சே தொடர்பான பகுதிகள் உட்பட ஒரு சில வரலாறு தொடர்புடைய பகுதிகளை 12 ஆம் வகுப்பு பாடத்திட்டத்திலிருந்தும் நீக்கப்பட்டிருந்தன. மேலும் 10 ஆம் வகுப்புகளில் உள்ள அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய பாடத்திட்டத்திலிருக்கும் தனிமங்களின் வரிசை அட்டவணை, அரசியல் கட்சிகள் மற்றும் ஜனநாயகத்திற்கு உள்ள சவால்கள் போன்ற பகுதிகளும் நீக்கப்பட்டுள்ளது. இதற்கு நாடு முழுவதிலுமிருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அரசியல் கொள்கையைப் பாட திட்டத்தில் திணிப்பதாக எதிர்க்கட்சிகள் புகார் கூறி வருகின்றன.


RECENT POSTS IN JOBSTAMIL.IN