பெண் குழந்தைகளின் சுகாதார நிலை குறித்து மாநில மனித உரிமை ஆணையத்தின் அதிரடி உத்தரவு…!

0
The State Human Rights Commission's action order regarding the health status of girls-State Human Commission To Cases On Girls Health Status

சென்னையில் உள்ள தண்டையார்பேட்டை மருத்துவமனைக்கு அருகே ஒரு காப்பகம் உள்ளது. இந்த காப்பகம் முக்கியமாக வீடற்ற பெண் குழந்தைகளுக்காக கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த பெண் குழந்தைகள் காப்பகம் மிக சிறப்பாக செயல்பட்டு வந்த நிலையில், தற்பொழுது சுகாதாரமற்ற நிலையில் குழந்தைகள் வாழ்ந்து வருவதாக ஆங்கில செய்தித்தாளில் இதை பற்றி செய்தி வெளியானது.

மேலும், இந்த பெண் குழந்தைகள் காப்பகத்தில் போதிய கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் பல பெண் குழந்தைகள் அங்கு தங்க வைக்கப்பட்டு இருப்பதாகவும் ஆங்கிலச் செய்தித்தாள்களில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதுமட்டுமள்ளம்ல் அங்கு சுகாதாரமற்ற நிலைமையில் குழந்தைகள் வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பெண் குழந்தைகள் காப்பகத்தின் சுகாதார நிலை பற்றி ஆங்கில செய்திதாள்களில் வெளியான செய்தியின் அடிப்படையில், மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர், ஆறு வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தமிழக மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here