தமிழ்நாடு என்ற எழுத்து வடிவில் அமைந்த பல்கலைக்கழகம்

Thanjavur Tamil University: தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் தமிழ் மொழி மற்றும் தமிழர் பண்பாடு ஆகியவற்றின் முதன்மையான உயர் ஆய்வை நோக்கமாகக் கொண்டது. 1981-ம் ஆண்டு செப்டம்பர் 15-ந் தேதி தொடங்கப்பட்ட இந்தப் பல்கலைக்கழகத்தில், கலைப்புலம், அறிவியல்புலம், மொழிப் புலம், சுவடிப்புலம், வளர்தமிழ்புலம் ஆகிய 5 பிரிவுகளின் கீழ் பல்வேறு துறைகள் செயல்பட்டு வருகின்றன.

thanjavur tamil university

The thanjavur tamil university is written in the form of TamilNadu
The thanjavur tamil university is written in the form of TamilNadu

இந்த ஐந்து பிரிவுகளுக்கும், ஐந்து கட்டிடங்கள் எழுப்பப்பட்டுள்ளன. அந்த ஐந்து கட்டிடங்களும் ‘தமிழ்நாடு’ என்ற சொல்லின் எழுத்துக்களைப் போன்று வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதாவது ‘த, மி, ழ், நா, டு’ என ஒவ்வொரு எழுத்துக்களின் வடிவமைப்பில் ஒவ்வொரு கட்டிடங்களும் எழுப்பப்பட்டுள்ளன.

‘த’ வடிவ கட்டிடத்தில் கலைப்புலம் துறைகளும், ‘மி’ வடிவ கட்டிடத்தில் அறிவியல்புலம் துறைகளும், ‘ழ்’ வடிவ கட்டிடத்தில் மொழிப்புலம் துறைகளும், ‘நா’ வடிவ கட்டிடத்தில் சுவடிப்புலம் துறைகளும், ‘டு’ வடிவ கட்டிடத்தில் வளர்தமிர்புலம் துறைகளும் செயல்படுகின்றன.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here