உலகின் மிகப்பெரிய அணு உலையில் குதித்து சாதனை புரிந்த இளைஞர்..! இணையத்தில் வைரலாகும் வீடியோ…

The young man who jumped into the worlds largest nuclear reactor and achieved a feat Video going viral on the internet

இன்றைய காலக்கட்டத்தில் வாழும் இளைஞர்கள் ஏதாவது ஒரு விதத்தில் சாதனை புரிய வேண்டும் என்ற ஆர்வம் அதிகம் உள்ளது. அதிலும் குறிப்பாக சில இளைஞர்கள் சில விஷயங்கள் ஆபத்து என்று தெரிந்தும்
அதனை எளிமையாக கையாள்வார்கள். மிகவும் ஆபத்தான பாறையின் உச்சியில் நின்று வீடியோ எடுப்பது மற்றும் ஆர்பரித்து ஓடும் அருவியில் நின்று வீடியோ எடுப்பது என பல்வேறு சாகசங்களை செய்து வருகின்றனர்.

அந்த வகையில், 21 வயதான தடகள வீரர் ஒருவர் யாரும் பண்ணாத புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். இது தொடர்பாக ஒரு வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், அவர் தன்னுடைய உடலில் பாராசூட்டை கட்டி கொண்டு அணு உலைப்போல் இருக்கும் ஒரு கோபுரத்தின் மேல் முனையிக்கு சென்று, சிறிதும் யோசிக்கமால் அங்கிருந்து குதித்தார். தரையை தொட சில விநாடிகள் இருக்கும்போது, தன்னுடைய பாராசூட்டை விடுவித்து அதன் மூலம் தரை இறங்குகிறார்.

ALSO READ : புயலால் சேதமடைந்த வாகனங்களுக்கான காப்பீட்டு தொகை ரூ.5 லட்சமாக அதிகரிப்பு..! சற்றுமுன் வெளியான புதிய அறிவிப்பு!!

இந்த வீடியோவானது இன்ஸ்டாகிராமில் ஜியோ மாஸ்டர்ஸ் என்ற பெயரில் வெளியிடப்பட்டு தற்பொழுது வைரலாகி வருகிறது. இதுவரை இந்த வீடியோவிற்கு 10.8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விமர்சனங்களை வெளியிட்டு உள்ளனர். தற்பொழுது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top