நேர்காணலில் பின்பற்ற வேண்டிய நெறிகள் | இன்டர்வியூ டிப்ஸ்..!

There Are Many Tips For Interview In Tamil

மக்கள் அனைவரும் தங்களது பொருளாதார நிலையை உயர்த்த வேண்டும் என விரும்புவது ஒரு வழக்கமான செயலாகும். அதற்காக படித்தவர்கள் முதல் படிக்காதவர்கள் வரையில் ஏதேனும் ஒரு வேலையை நாடிச் செல்கின்றனர். ஒருவரின் பொருளாதார உயர்வுக்கு தனிநபர் வருமானம் மிகவும் முக்கியம். அதற்கு வேலை என்ற ஒன்று கைவசம் இருக்க வேண்டும். இவ்வுலகில் வேலையை தேடுபவர்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காதவையாக இருக்கின்றனர். வேலை தேடுவது என்பது தன்னுடைய அறிவாற்றல் மற்றும் உடல் உழைப்பை கொண்டு ஊதியம் பெறுவதே ஒரு சிறந்த வழியாகும். இந்த காலக் கட்டத்தில் வேலை கிடைப்பது என்பது எளிதல்ல. அறிவியல் மற்றும் விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக வேலைகள் அனைத்தும் எந்திரமாகி விட்ட நிலையில் வேலையில்லா திண்டாட்டம் நிலவி வருகிறது. இவற்றை அனைத்தையும் கடந்து வேலையை தேடி செல்லும் போது அனைத்து இடங்களிலும் நேர்காணல் என்ற போட்டித்தேர்வு நிச்சயம் இருக்கும்.

நேர்காணல் என்ற ஒரேயொரு தேர்வினை வைத்துதான் நீங்கள் அந்த வேலைக்கு தகுதியானவரா என நிர்ணயம் செய்கின்றனர். எந்த ஒரு துறையாக இருந்தாலும் அதற்கு நேர்காணல் முறையின் மூலமாகத்தான் தேர்வு செய்யப்படுவார்கள். பொதுவாக நேர்காணல் என்பது இருவருக்கு இடையே நடக்கும் ஒரு உரையாடல் தொகுப்பாகும். இதில் பல்வேறு கேள்விகள் கேட்கப்படும். இதற்கு நீங்கள் முன்பே தயார் செய்து வைத்து கொள்ள வேண்டும். நேர்காணல் முறையில் கேட்கப்படும் கேள்விகள் அனைத்திற்கும் நீங்கள் சிறந்த முறையில் பதிலளிக்க வேண்டும். கேள்விகளுக்கு பதில் தெரியவில்லை என்றாலும் நன்கு யோசித்து எந்த ஒரு குழப்பம் இல்லாமல் தெளிவான ஒரு பதிலை கூற வேண்டும். உங்கள் பதில் அவர்களுக்கு உங்கள் மேல் இருக்கும் நம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் இருக்க வேண்டும்.

ஒரு வேலையை பெறுவதற்கு சரியான விண்ணப்பம் மற்றும் அறிவு தேவையில்லை என்றாலும் நேர்காணலில் HR கேட்கும் கேள்விகளுக்கு சிறந்த முறையில் பதில் அளித்தாலே போதுமானது. மேலும் நேர்காணலின்போது நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய சில முக்கிய குறிப்புகள்:

நேர்காணலில் பின்பற்ற வேண்டிய நெறிகள் | இன்டர்வியூ டிப்ஸ்..!

1. பணியாளர்களை மதிக்கவும்

Respect The Employees

நிறுவனத்தில் பணிபுரியும் வரவேற்பாளர் மற்றும் நேர்காணல் செய்பவர் என அனைவரையும் நீங்கள் பணிவு மற்றும் மரியாதையுடன் நடத்த வேண்டும்.

2. ஆடை அணிதல்

Interview Dress Codes

நீங்கள் அணியும் ஆடை நீங்கள் செல்லும் நேர்காணலின் நிறுவனத்திற்கு ஏற்ப மிகவும் நீட்டாக இருக்க வேண்டும். நீங்கள் உடுத்தும் ஆடைகள் அவர்களுக்கு மட்டுமல்லாமல் உங்களுக்கும் உங்கள் மேல் ஒரு நம்பிக்கை வரும். அதனால் ஒரு நல்ல ஆடையை அணிந்து செல்ல வேண்டும்.

ALSO READ >அடிக்கடி HR பிரஷர்களிடம் கேட்கும் இன்டர்வியூ கேள்விகள் என்னென்ன?

3. நேர்மறையை வெளிபடுதல்

Exuding Positivity

நேர்காணலின் போது நேர்காணல் செய்பவர் உங்களுது நேர்மை, நெகிழ்வுதன்மை என அனைத்தையும் சோதிப்பார்கள். அப்பொழுது நீங்கள் உங்கள் நேர்மறை தன்மை மற்றும் பண்புகளை வெளிப்படுத்த வேண்டும்.

4. அதிகம் பேசாதீர்கள்

Do Not Talk Too Much

அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு மட்டும் பதில் அளிக்காமல் அந்த தலைப்பு சம்பந்தமான என்ன தெரிகிறதோ அனைத்தையும் தெளிவாக கூற வேண்டும். அதுமட்டுமல்லாமல் நீண்ட நேரம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்க்க வேண்டும்.

மேலும் நேர்காணலின் போது சில சவாலான கேள்விகள் கேட்கப்படும். இதுபோன்று நேர்காணலில் அதிகப்படியாக கேட்கப்படும் கேள்விகள் மற்றும் அதற்கான சிறந்த பதில்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ALSO READ >வீட்டில் இருந்தே ஆன்லைன் வேலை பாக்குறீங்களா? பயனுள்ள சில குறிப்புகள் இதோ…

i) உங்களை அறிமுகம் படுத்தி கொள்ளுங்கள்

Tips For a Successful Job Interview

எந்த ஒரு நிறுவனமாக இருந்தாலும் நேர்காணலின் போது கேட்கப்படும் முதல் கேள்வி இதுவாக தான் இருக்கும். இதில் உங்கள் கல்வி மற்றும் கடந்த கால அனுபவம், உங்கள் திறன்களை பற்றி தெளிவாக சொல்ல வேண்டும். உங்கள் கல்வி, ஆர்வம் மற்றும் அனுபவத்தை முன்னிலை படுத்தி சொல்ல வேண்டும். சில நேரங்களில் நேர்காணல் செய்பவர் உங்களை பற்றி அதிகம் தெரிந்து கொள்ள விரும்புவார் அதற்கு நீங்கள் சொல்லும் பதில் ஒரு வாய்ப்பாக இருக்கலாம். இதில் உங்களைப் பற்றிய விவரங்களை சொல்லும்பொழுது மற்றவர்களுடன் ஒப்பீடுகையில் உங்கள் பதில் எந்த அளவுக்கு மாறுகிறது என்று எதிர்பார்ப்பார்கள். எந்த ஒரு பதட்டமும் இல்லாமல் தெளிவாக பதில் அளிக்க வேண்டும்.

ii) உங்கள் பலம் என்ன?

What are your strengths

இந்த கேள்விக்கான பதில் மற்றவர்களை காட்டிலும் வேறுபட்டதாக இருக்க வேண்டும். இதில் உங்களின் சிறந்த பலன்களை பட்டியலிட்டு சொல்ல வேண்டும். எந்த நிறுவனத்தில் எந்த வேலைக்காக ஆட்களை தேர்வு செய்கிறார்கள்என்பதிற்கு ஏற்ப உங்கள் திறன்களை சொல்ல வேண்டும். உங்கள் நேர்மறை பண்பு, குளு உணர்வு, நெகிழ்வுதன்மை போன்ற சிறந்த பண்புகளை முன்னிலை படுத்தி சொல்லுங்கள். இதன் மூலம் உங்களின் சுயமதிப்பீடு தெரியப்படும்.

உதாரணமாக:

நீங்கள் வாடிக்கையாளர் பதவிக்கு விருப்பம் உள்ளவர்கள் எனில் அதில் உங்களின் சேவை மற்றும் திறனை எடுத்து சொல்லலாம்.

iii) இந்த வேலையை தேர்வு செய்ய என்ன காரணம்?

What made you choose this job

நீங்கள் ஒரு நிறுவனத்திற்கு வேலைக்கு செல்வதற்கு முன் அந்த நிறுவனத்தை பற்றி அறிந்து கொண்டு சொல்ல வேண்டும். நீங்கள் நிறுவனத்தை பற்றி தெரிந்து உள்ளீர்களா என சோதிக்கப்படும். இதற்கு நீங்கள் சொல்லும் பதில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். ஏனெனில் இதன் மூலம் தான் நீங்கள் இந்த தொழில் மீது எவ்வளவு ஆர்வத்துடன் உள்ளீர்கள் என்பதை அவர் அறிய ஒரு வாய்ப்பாக இருக்கும். இந்த நிறுவனத்தில் சேர நீங்கள் எவ்வளவு ஆர்வமாக உள்ளீர்கள் மற்றும் பதவியை பற்றி எவ்வளவு தெரிந்து உள்ளீர்கள் என வெளிபடுத்த இது ஒரு வாய்ப்பாக இருக்கும்.

ALSO READ >வேலையில் மன அழுத்தம் ஏற்படுகிறதா? இதோ அதற்கான சிறந்த தீர்வுகள்..

iv) உங்களின் வருங்கால இலக்கு என்ன?

What is Your Future Goal

இந்த கேள்வியின் மூலம் உங்களின் நீண்ட கால இலக்கை தெரிந்து கொள்ள விரும்புவார்கள். இந்த நிறுவனத்தில் எந்த ஒரு இலக்கை அடைய ஈடுப்பாட்டுடன் உள்ளீர்கள் என்பதை அறிவார்கள். அதன் மூலம் உங்களது உழைப்பு எப்படி இருக்கும் என தெரிந்து கொள்வார்கள். உங்கள் மீதான அபிப்பிராயத்தை அதிகரிக்கும். இதில் உங்கள் கனவு மற்றும் இலட்சியத்தை சொல்ல ஒரு வாய்ப்பாக இருக்கும்.

v) அதிக நேரம் வேலை செய்வது உங்களுக்கு பிடிக்குமா?

Do You Like Working Long Hours

நேர்காணலில் இந்த கேள்வியும் ஒன்றாக இருக்கும். இந்த கேள்வியில்தான் உங்களது உழைப்பை பற்றி அவர் அறிந்துகொள்ள ஒரு வாய்ப்பாக இருக்கும். இந்த கேள்விக்கான பதிலை நீங்கள் முழு மனதுடன் நேர்மையாக பதில் அளிக்க வேண்டும்.

நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கொடுக்க கூடாது. உங்கள் நலன் மற்றும் ஆரோக்கியத்தை கருதி அதிக நேரம் வேலை செய்வது வசதியாக உள்ளது எனில் உறுதி கொடுக்க வேண்டும்.

vi) முந்தைய வேலையை ஏன் விட்டீர்கள்?

Why Resign Your Job

இந்த கேள்வி நீங்கள் ஒரு நிறுவனத்தின் கருத்தை எப்படி சொல்கீறாய் என எதிர்பார்க்கப்படும். நீங்கள் இந்த கேள்விக்கு முன்னராக தயார் செய்து கொள்வது நல்லது. நீங்கள் இதற்கு முன் பணி செய்த நிறுவனத்தை பற்றி குற்றம் செய்ய முயற்சி செய்யாதீர்கள். முந்தைய வேலையில் எனக்கு போதுமான அளவு ஊதியம் கிடைக்கவில்லை. அதனால்தான் இந்த மாற்றம் என ஒரு தெளிவான பதிலை அளிக்க வேண்டும்.


RECENT POSTS IN JOBSTAMIL.IN

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here