நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக SBI வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் கோடிகணக்கான மக்கள் வாடிக்கையாளர்களாக உள்ளனர். SBI வங்கி அவ்வபோது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் வைப்புத் தொகைக்கான வட்டி விகிதம் அதிகரித்தல், பல்வேறு சேமிப்பு திட்டங்கள் போன்றவற்றை புதிது புதிதாக அறிமுகம் செய்து வருகிறது.
அந்த வகையில், தற்பொழுது SBI வங்கி வாடிக்கையாளர்களின் பணிகளை எளிதாக்கும் வகையில் புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, பொதுமக்கள் மத்திய அரசின் திட்டத்தில் விண்ணப்பிப்பதை மிகவும் சிரமாக உள்ளதாக தெரிவிக்கின்றனர். இத்தகைய சிரமத்தை போக்க வாடிக்கையாளர்கள் SBI வங்கி கிளைகளில் உள்ள வாடிக்கையாளர் சேவை பிரிவிற்கு சென்று ஆதார் எண்ணை கொடுக்க வேண்டும். ஆதார் எண்ணை பெற்றப்பின் அங்குள்ள ஊழியர்கள் உங்களது தகுதிக்கேற்ப பிரதான் மாதிரி ஜீவன் ஜோதி பீமா, அடல் பென்ஷன் யோஜனா போன்ற திட்டங்களில் உங்களது பெயரை பதிவு செய்வார்கள். இந்த சேவையை பெற வங்கியின் பாஸ் புக்கை எடுத்த செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றும் SBI தெரிவித்துள்ளது.
Also Read : இனிமே விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் இல்லயாம் ரூ.8 ஆயிரம் தராங்களாம்..! சற்றுமுன் வெளியான லேட்டஸ்ட்டு அப்டேட்!!