ஆவின் பாலுக்கு கடும் தட்டுபாடு..! அதிரடியாக உயர்ந்த பால் விலை! அன்புமணி ராமதாஸ்

There is a severe shortage of Aa's milk Dramatically high milk prices Anbumani Ramadoss-Green Cover Milk Should Increase

தமிழகத்தில் பால் விற்பனை என்றாலே முதலில் நியாபகத்தில் வருவது ஆவின் பால் தான். அந்த வகையில், ஆவின் பால் நிறுவனம் தினசரி 40 லட்சம் லிட்டர் பாலை கொள்முதல் செய்கின்றனர். இதில் பாக்கெட் நிறத்திற்கேற்ப பால் வகைப்படுத்தபடுவது வழக்கம். ஆவின் ஆரஞ்சு நிற பால் (நிறைகொழுப்பு பால்) பாக்கெட்துகளிலும், சமன்படுத்தப்பட்ட பால் (நீல நிறம்) பாக்கெட்துகளிலும், மற்றும் நிலைப்படுத்தப்பட்ட பால் (பச்சை நிறம்) பாக்கெட்துகளிலும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை தெரிவித்தார். அதில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஆவின் பச்சை உறை பாலுக்கு கடுமையாக தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. பச்சை உறை பாலுக்கு தட்டுப்பாடு ஏற்படுவதற்கு முதன்மை காரணம் ஆரஞ்சு உறை பால் விலை உயர்த்தப்பட்டது தான். அதனால் லிட்டருக்கு ரூ.16 கூடுதலாக கொடுத்து ஒரு லிட்டர் ரூ.60 என்ற விலைக்கு ஆரஞ்சு நிற பாக்கெட் விற்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் ஆவின் ஆரஞ்சு நிற பாக்கெட்டின் பாலை வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, ஆவின் வாடிக்கையாளர்களை ஆவின் நிறுவனம் ஏமாற்றி வருகிறது. எனவே வாடிக்கையாளர்களை ஏமாற்ற கூடாது என்றும் பச்சை உறை பால் வினியோகத்தை குறைந்தது 20% அதிகரிக்க வேண்டும். அதில் ஏதேனும் தடை இருந்தால் ஆரஞ்சு உறை பாலின் விலையை முன்பிருந்தவாறே லிட்டர் ரூ.48 என்ற அளவுக்கு குறைக்க ஆவின் நிறுவனம் முன்வர வேண்டும் என்றும் அன்பிமணி ராமதாஸ் தெரிவித்தார்.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here