தமிழகத்தில் இந்த 2 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது தராங்களாம்..! அப்படி அவர்கள் என்ன செய்தார்கள்?

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தேசிய அளவிலும், மாநில அளவிலும் ஆசிரியர்கள் தேர்வு வைக்கப்பட்டு அவர்களுக்கு கவுரவப்படுத்தும் வகையில் மத்திய அரசுகள் நல்லாசிரியர் விருதுகள் மற்றும் சான்றிதழகள் வழங்கி வருகின்றனர்.

இந்த வகையில் மத்திய அரசு அமைச்சகம் 2023 ஆம் ஆண்டுக்கான தேசிய நல்ல்லாசிரியர் விருது தொடர்பான அறிவிப்பை நேற்று முன்தினம் இரவு வெளியிட்டது. இதன்படி இந்தியா முழுவதும் விண்ணபித்த ஆசிரியர்களில் சிறந்த 50 ஆசிரியர்களை தேர்வு செய்து அவர்களின் பட்டியலை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு, ராஜஸ்தான், குஜராத், மத்தியபிரதேசம், ஒடிசா, உத்தரபிரதேசம், கர்நாடகா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து தலா 2 பேரும் பீகார், ஆந்திராவில் இருந்து அதிகபட்சமாக தலா 3 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

These 2 teachers in Tamil Nadu will be given the National Good Teacher Award So what did they do read it now

அதேபோல், மற்ற மாநிலங்களில் இருந்து ஒருவரும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் வீரகேரளம்புதூர் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியை எஸ்.மாலதியும், மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் டி.காட்வின் வேதநாயகம் ராஜ்குமாரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Also Read : இனிமே வாட்ஸ் அப்பில் HD வீடியோக்களையும் ஈஸியா அனுப்பலாம்..! எப்படின்னு தெரியுமா? உடனே தெரிஞ்சிகோங்க…

இதன்படி, டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெறும் ஆசிரியர் தின விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசிய ஆசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு அடுத்த மாதம் (செப்டம்பர்) 5 ஆம் தேதி விருது வழங்கி கவுரவிக்க உள்ளார். அதேபோல் 385ஆசிரியர்களுக்கு தமிழ்நாட்டில் மாநில அரசு சார்பில் விருதுகள் அதே நாளில் வழங்கப்பட உள்ளன. இந்த விருது பெற உள்ளவர்களின் பட்டியலை இறுதி செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. மேலும், இந்த பட்டியலை தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித் துறை விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.