ஆர்ட்டெமிஸ் 1 திட்டம் வெற்றியைத் தொடர்ந்து நாசா அதன் நிலவு திட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா ஆர்ட்டெமிஸ் திட்டத்தின் மூலம் மீண்டும் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டு வருகிறது. அந்தவகையில் பல கட்ட பிரச்சனைகளுக்கு பிறகு ஆர்ட்டெமிஸ் I ஆளில்லா விண்கலத்தை நாசா வெற்றிகரமாக ஏவியது. இந்நிலையில் அடுத்த முயற்சியாக ஆர்ட்டெமிஸ் II திட்டத்திற்கு நாசா தயாராகி வருகிறது. ஆர்ட்டெமிஸ் II திட்டத்தில் விண்வெளி வீரர்கள் நிலவு சுற்றுப் பாதைக்கு சென்று திரும்புவர்.
இதற்காக 4 பேர் கொண்ட விண்வெளி வீரர்கள் குழுவை நாசா மற்றும் கனேடியன் விண்வெளி நிலையம் ஏப்ரல் 3(இன்று) அறிவித்துள்ளது. அதன்படி, ஜெர்மி ஹென்சன், விக்டர் க்ளோவர், ரீட் வைஸ்மேன், கிறிஸ்டினா ஹம்மக் கோச் ஆகியோர் நிலவுக்கு செல்வதாக நாசா தெரிவித்துள்ளது.
இந்த 4 வீரர்களில் 3 அமெரிக்கர்கள் மற்றும் ஒரு கனடா விண்வெளி ஏஜென்சி வீரர் இடம்பெற்றுள்ளனர். மேலும், இந்த திட்டத்தில் முதல் முறையாக பெண் விண்வெளி வீராங்கனை கிறிஸ்டினா ஹம்மக் கோச் இடம்பெற்றுள்ளார்.
RECENT POSTS IN JOBSTAMIL.IN
- இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள்
- Latest Govt Jobs 2023 | Government Jobs 2023 | Government Job Vacancies
- Defence Job Alert 2023 – Free Job Alert Defence – Latest Government Jobs in India
- TN Govt Jobs 2023 | Get the Latest Tamilnadu Government Job Alert 2023
- Railway Recruitment 2023 | இந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள்