ஆதார் அப்டேட் செய்ய அதிக கட்டணம் வசூல் செய்கிறார்கள்! மக்களே உஷார் UIDAI அறிவிப்பு!

Aadhaar Update People Alert: இந்திய குடிமகன் என்ற அடையாளத்திற்கு ஆதார் கார்டு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. வங்கிக்கணக்கு, செல்போன் சிம்கார்டு உள்ளிட்ட எந்த தேவைக்கும் அத்தியாவசிய ஆவணமாக ஆதார் கார்டே உள்ளது. அப்படி எடுக்கப்பட்ட ஆதார் கார்டில் பிழையிருக்கிறதா என்பதை செல்போனில் ஆன்லைன் மூலமே எளிதில் தெரிந்து கொள்ள முடியும்.

They are charging high fees for Aadhaar update People alert UIDAI notification
They are charging high fees for Aadhaar update People alert UIDAI notification

ஆதார் ஆணையம் ஆதாரை கட்டாயமாக 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள நிலையில், இதற்காக கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்து புகார்கள் பெறப்பட்டுள்ளது. இந்த ஆதார் அட்டையில் தனி நபரின் பெயர், வயது, பிறந்த தினம், முகவரி, பயோ மெட்ரிக் தரவுகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டிருக்கும்.

இந்நிலையில் ஆதாரில் உள்ள பெயர், முகவரி, பிறந்த தேதி, பாலினம், மொபைல் நம்பர் மற்றும் மின்னஞ்சல் ஆகிய விவரங்களில் உள்ள தவறுகளை திருத்த 50 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படுகின்றது. இது தவிர ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் பயோமெட்ரிக் அப்டேட் செய்வதற்கு 100 ரூபாய் மட்டுமே செலுத்த வேண்டும்.

ஆதார் ஆணையம் இதனை கவனத்தில் எடுத்துக் கொண்டு ஆதார் சேவைகளுக்காக எந்த ஒரு கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை என்றும், இது போன்ற புகார்களை 1947 என்ற தொலைபேசி எண் அல்லது [email protected] என்ற மின்னஞ்சலில் முகவரியில் மற்றும் https://resident.uidai.gov.in/file-complaint என்ற இணையதளத்தில் தெரிவிக்கலாம்.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here