இவங்களாம் “வாட்ஸ் அப்” யூஸ் பண்ணக்கூடாதாம்..! அரசு உத்தரவிட்டுள்ளது!

They should not use whats up too The government has ordered-Teachers Dont Use Whats App

பொதுவாக மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், நடப்பு கல்வியாண்டுக்கான(2022-2023) 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வருகிற மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது.

இந்த சூழ்நிலையில், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு தற்பொழுது புதிய விதிமுறைகளை அரசு தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது. அந்த விதிமுறைகளில், பொதுத்தேர்வு அறைக்கு வரும் ஆசிரியர்கள் தேர்வு நேரத்தில் சமூக வலைத்தளமான “வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம்” போன்ற எந்தவொரு வலைதளங்களையும் பயன்படுத்த கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து அரசு தேர்வுத்துறை அதிகாரிகள் கூறுகையில், பொதுத்தேர்வு வினாத்தாள்கள் சமூக வலைதளங்களில் வெளியாகாமல் இருக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ள பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


RECENT POSTS IN JOBSTAMIL

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here