திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா..! 12 ஆயிரத்துக்கும் மேல் போலீசார் குவிப்பு

Thiruvannamalai Karthikai Deepatri Festival More than 12 thousand police concentration-Karthigai Deepam Festival

கார்த்திகை தீபத்தை முன்னிட்டு திருவண்ணமலையில் நவம்பர் 27 ம் தேதி கொடியேற்றும் நிகழ்ச்சி தொடங்கியது . இந்த விழா 10 நாட்கள் நடைபெறும். கடைசி நாளான டிசம்பர் 6 ம் நாள் மகதீப திருவிழா நடைபெறும். கார்த்திகை தீபத்தன்று அண்ணாமலையாரை காண தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வருவது வழக்கம்.

இந்நிலையில், இந்த விழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம் இன்று அதிகாலை திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் வளாகத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க ஏற்றப்பட்டது. அதில், அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக மகா தீபம் இன்று மாலை ஏற்றப்படுகிறது.

இந்த மகா தீபத்திற்கு பயன்படுத்தப்படும் தீப கொப்பரைக்கு நேற்று முன்தினம் சிறப்பு பூஜை செய்யப்பட்டு மலைக்கு கொண்டு செல்லப்பட்டது. அத்துடன் 4,500 லிட்டர் நெய், தீபத்திற்கு தேவையான காடா துணிகள் மலைக்கு எடுத்து செல்லப்பட்டது. திருவண்ணாமலை கோவிலின் பின்புறம் உள்ள 2,668 அடி உயரமுள்ள மலையின் உச்சியில் இன்று மாலை 6 மணிக்கு தீபம் ஏற்றப்படும். இந்த மகா தீபத்தை காண லட்ச கணக்கில் பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திருவாண்ணாமலையில் மகாத்தீபத்தை ஏராளமான பக்தர்கள் வருகை தருவதால் பாதுக்காப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பக்தர்களின் பாதுகாப்புக்காக ஐந்து அடுக்கு போலீஸ் பாதுக்காப்பு போடப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு பணியில் 12 ஆயிரம் போலீசார் வடக்கு மண்டல ஜஜி கண்ணன் தலைமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here