இது என்னடா புதுசா இருக்கு..! பிஃபா இட்லியா? உங்களுக்காவது இது என்னென்னு தெரியுமா?

This is so new FIFA Italy Do you even know what this is-FIFA Idly

கால்பந்து போட்டி என்பது உலகிலுள்ள அனைவராலும் விரும்பி பார்க்கக்கூடிய விளையாட்டுகளில் ஒன்று. இந்த விளையாட்டினை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி விளையாடுகின்றனர்.

இந்நிலையில், உலகோப்பை கால்பந்து போட்டியானது நான்கு வருடத்திற்கு ஒருமுறை விளையாடப்படுவது வழக்கம். இந்த உலக கோப்பை போட்டியானது இந்த ஆண்டு கத்தாரில் நடைபெற்று வருகிறது. இந்த கால்பந்து விளையாட்டினை போற்றும் வகையில், நாட்டில் உள்ள பல இடங்களில் கால்பந்து பொம்மை உருவம், வன்னவிளக்கு, கடைகளில் வித விதமான கால்பந்து விற்பனை போன்ற வித்தியாசமான படைப்புகளை கொண்டு மக்களை கவர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில், புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் இந்த கால் பந்து விளையாட்டினை சிறப்பிப்பதற்காக ‘FIFA இட்லி’ என்கிற ஒரு வித்தியாசமான வடிவில் இட்லியை தயாரித்து விற்பனை செய்கின்றனர். இந்த இட்லி பார்ப்பதற்கு கால்பந்து போலவே இருக்கிறது. இதற்கென்றே தனி ஆச்சு தட்டு தாயாரிக்கப்பட்டு கால்பந்து வடிவில் இட்லியை தயாரித்து விற்பனை செய்கின்றனர். இதனை மக்கள் விரும்பி உண்ணுகின்றனர்.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here