TNPSC எனப்படும் அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது தமிழக அரசு துறைகளில் காலியாக பணியிடங்களை நிரப்ப போட்டி தேர்வுகளை நடத்தி அதன் மூலம் பணியாளர்களை தேர்வு செய்து வருகிறது. இதில், ஒவ்வொரு பதவிகளுக்கும் என குரூப் 1, குரூப் 2, குரூப் 4 என தனித்தனி குரூப்களாக பிரிக்கப்பட்டு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், கள உதவியாளர், வரித் தண்டகர், பண்டகக் காப்பாளர் ஆகிய பதவிகளுக்கு என குரூப் 4 தேர்வு கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்றது. இந்த தேர்வுக்கான முடிவுகள் கடந்த மார்ச் மாதம் TNPSC வெளியிட்டது. இதையடுத்து, தற்பொழுது TNPSC குரூப் 4 தேர்வு குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்ட குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 2 ஆம் கட்ட கலந்தாய்வுக்கான தேதியை TNPSC அறிவித்துள்ளது. அதன்படி, வருகிற 21 ஆம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி வரை 3,373 தட்டச்சர் பதவிக்கான மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலாந்தாய்வு நடைபெறும் என்று தெரிவித்துள்ளது. மேலும், நவம்பர் 20 முதல் 26 வரை 1079 சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கான சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read : ஒரு பிச்சைக்காரனின் மாதம் வருமானம் ரூ.75 ஆயிரமா..? என்ன கொடும சார் இது…
இந்நிலையில், TNPSC நடத்தும் இரண்டாம் கட்ட கலந்தாய்வுக்கு தேர்வானவர்கள் கலந்தாய்விற்கான தேதி, நேரம் உள்ளிட்ட விவரங்களை அறிய விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.