பள்ளிகள் திறந்த முதல் நாளே மாணவர்களுக்கு இதை கொடுக்க வேண்டும்..! ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய உத்தரவு!

This should be given to students on the first day of opening of schools The main order issued by the Department of School Education for teachers dont miss and read

தமிழகத்தில் கடந்த 2022-23 ஆம் கல்வியாண்டின் ஆண்டு இறுதித் தேர்வானது 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்த அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் முடிவடைந்தன. தேர்வுகள் முடிவடைந்ததையொட்டி அவர்களுக்கு தற்போது கோடைவிடுமுறையும் அளிக்கப்பட்டது. தொடர்ந்து அடுத்த கல்வியாண்டிற்கான (2023 – 24) வகுப்புகள் வருகின்ற ஜூன் மாதம் முதல் தொடங்கப்பட உள்ளது.

அதனையடுத்து கல்வித்துறையானது பள்ளி மாணவர்களுக்கான புத்தகங்கள், சீருடைகள் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை அவர்களுக்கு அளிப்பதற்கான பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றது. இது பற்றி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறையானது சுற்றறிக்கை அனுப்பியிருக்கின்றது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

வரும் 2023-2024 ஆம் கல்வியாண்டிற்கான 1 முதல் எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பு வரையிலான நோட்டு புத்தகங்கள் , 1 முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான தமிழ், ஆங்கில வழி மற்றும் சிறுபான்மை மொழிகளுக்கான பாடநூல்கள் மற்றும் இதர கல்வி உபகரணப் பொருட்களின் தேவைப்பட்டியல்கள் அனைத்தும் பெறப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் அனைத்து மாவட்ட கல்வி அலுவலக வினியோக மையங்களுக்கும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் மற்றும் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம் மூலம் அனைத்து விவரங்களும் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் கோடை விடுமுறை முடிந்து மாணவ மாணவிகள் பள்ளிகளுக்கு வருகை தரும்போது அவர்களுக்கு முதல் நாளில் உடனடியாக நோட்டு புத்தகங்கள், பாட நூல்கள் மற்றும் இதர கல்வி உபகரண பொருட்கள் உள்ளிட்டவைகளை அளிக்க வழி வகை செய்யப்பட வேண்டும். அதற்கான முன் நடவடிக்கைகளாக அனைத்து பள்ளிகளுக்கும் விநியோக மையங்களின் மூலமாக எவ்வித காலதாமதமும் இன்றி அனைத்து கல்வி உபகரணங்களையும் இந்த விடுமுறை நாட்களிலேயே அனுப்பி வைக்கப்பட்டிருக்க வேண்டும்.

இப்படியாக அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


RECENT POSTS IN JOBSTAMIL.IN