ஒரே இடத்தில் குவிந்த ஆயிரகணக்கான காகங்கள்..! வைரல் வீடியோ..

Thousands of crows gathered in one place Viral video-Thousands Of Crows In Island

பொதுவாக காகங்கள் கூட்டம் கூட்டமாக பறந்து செல்வது வழக்கம். அதேபோல் உணவுகளை உட்கொள்ளும்போதும் அதனுடைய கூட்டத்தை அழைக்கும். அந்த வகையில், ஜப்பானில் நடந்த சம்பவம் மக்களை ஆச்சரியத்தில் உள்ளாக்கியது. ஜப்பானின் கிழக்கு பகுதியில் இருக்கும் ஹோன்சு தீவில் கூட்டம் கூட்டமாக ஆயிரக்கணக்கான காகங்கள் சூழ்ந்த விசித்திர சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள சாலைகள், கட்டிடங்கள் மற்றும் வாகனங்கள் என பார்க்கும் இடத்தில் எல்லாம் காகங்கள் கூட்டம் கூட்டமாக வந்து குவிந்தன.

வானத்திலும் காகங்கள் கூட்டம் கூட்டமாக வட்டமிட்டு பறந்தன. இதை பார்த்த அந்நாட்டு மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில் காகங்கள் தீவு முழுவதும் சூழ்ந்திருக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. இந்த விசித்திர நிகழ்விற்கு காரணம் என்ன என்பது தெளிவாக தெரியவில்லை.

அதே சமயம் இந்த நிகழ்வு நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரழிவுகளை சுட்டிக்காட்டுவதாக நிபுணர்கள் பலரும் கருதுகின்றனர். சமீபத்தில் துருக்கியில் நிலநடுக்கம் ஏற்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன் கூட்டம் கூட்டமாக பறவைகள் ஒலி எழுப்பியபடி வானத்தில் பறந்து சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது குறிப்பிடத்தக்கது.

RECENT POSTS IN JOBSTAMIL

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here