திருப்பதி கோவிலுக்கு பக்தர்கள் செலுத்தும் காணிக்கை முடி ஏலம்…! எத்தனை கோடி வசூல் தெரியுமா?

0
Tirupati temple offering hair auction Do you know how many crores are collected-Tirupati Temple Devotes Tiaras Auctioned For Many Crores

நாட்டின் புகழ்பெற்ற கோயில்களில் ஒன்றான திருப்பதி கோயிலுக்கு நிகராக அங்கு வழங்கப்படும் லட்டு பிரசாதம்தான் சிறப்பு மிக்கது. லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதி வந்து ஏழுமலையானை தரிசனம் செய்வதுடன், வருகை தரும் பக்தர்களில் பெரும்பாலானோர் தங்கள் முடியை காணிக்கையாக வழங்குவது வழக்கம். பெரும்பாலான பெருமாள் பக்தர்களின் குடும்பங்களில் ஆண்டுக்கு ஒரு முறை திருப்பதி சென்று முடி காணிக்கை செலுத்தும் வழக்கம் உண்டு.

இந்நிலையில். திருப்பதி எழுமலையான் கோவிலில் காணிக்கையாக செலுத்திய 21ஆயிரம் கிலோ தலை முடியை தேவஸ்தானம் ஏலம் விட்டது. இந்த ஏலத்தில் 21ஆயிரம் கிலோ தலை முடி சுமார் 48 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் இந்த தலை முடியை மூன்று மாதத்திற்கு ஒரு முறை தேவஸ்தானம் ஏலம் விடுவது வழக்கம். இந்நிலையில், இந்த மாதம் சுமார் 48 கோடி ரூபாய்க்கு ஏலம் போனதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here