TN Cooperative Bank Recruitment 2023: தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டத்தில் கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்களில் காலியாக உள்ள 2257 உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியான மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக மட்டுமே 01.12.2023 அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன. எனவே தகுதியானவர்கள் அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இப்பணிக்கு ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு (Any Degree) (10+2+3 முறையில்) மற்றும் கூட்டுறவுப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும், பல்கலைக் கழகங்களால் வழங்கப்படும் பட்டப் படிப்பிற்குப் பதிலாக, 15 ஆண்டுகள் இராணுவத்தில் பணி புரிந்தவர்களுக்கு இராணுவத்தால் வழங்கப்படும் பட்டப் படிப்புச் சான்றிதழ் (Military Graduation) பெற்றுள்ள முன்னாள் இராணுவத்தினர்களும் விண்ணப்பிக்கலாம். ஆனால் அவர்கள் பள்ளி இறுதித் தேர்வும் பத்தாவது மேல் நிலைக் கல்வியும் (HSC) முறையாக பள்ளியில் பயின்று தேர்ச்சி பெற்றிவார்கள் விண்ணப்பிக்கலாம்.
தமிழக கூட்டுறவு வங்கி பணிக்கான வயது வரம்பு ஆனது, 01.07.2023 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும் (அதாவது 01.07.2005 அன்றோ அதற்கு முன்னரோ பிறந்தவராக இருத்தல் வேண்டும்). மேலும் இதர வகுப்பினர் (OC), இதர வகுப்பினைச் (OC) சார்ந்த முன்னாள் இராணுவத்தினர், இதர வகுப்பினைச் (OC) சார்ந்த மாற்றுத் திறனாளிகள் அதிகபட்சம் 32 முதல் 50 க்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு கூட்டுறவு நிறுவனங்களில் காலியிட விவரங்கள் இதோ:-
- அரியலூர் – 28
- செங்கல்பட்டு – 73
- கோவை – 110
- சென்னை – 132
- திண்டுக்கல் – 67
- ஈரோடு – 73
- காஞ்சிபுரம் – 43
- கள்ளக்குறிச்சி – 35
- கன்னியாகுமரி – 35
- கரூர் – 37
- கிருஷ்ணகிரி – 58
- மயிலாடுதுறை – 26
- நாகப்பட்டினம் – 8
- நீலகிரி – 88
- ராமநாதபுரம் – 112
- சேலம் – 140
- சிவகங்கை – 28
- திருப்பத்தூர் – பல்வேறு
- திருவாரூர் – 75
- தூத்துக்குடி – 65
- திருநெல்வேலி – 65
- திருப்பூர் – 81
- திருவள்ளூர் – 74
- திருச்சி – 99
- ராணிப்பேட்டை – 33
- தஞ்சாவூர் – 90
- திருவண்ணாமலை – 76
- கடலூர் – 75
- பெரம்பலூர் – 10
- வேலூர் – பல்வேறு
- விருதுநகர் – 45
- தருமபுரி – 28
- மதுரை – 75
- நாமக்கல் – 77
- புதுக்கோட்டை – 60
- தென்காசி – 41
- தேனி – 48
- விழுப்புரம் – 47
என மொத்தம் 2257 பணியிடங்கள் காலியாக உள்ளன.
விண்ணப்பக்கட்டணம்
விண்ணப்பப் பதிவு மற்றும் எழுத்துத் தேர்வுக்கான கட்டணம் ஆனது, ஆதிதிராவிடர், பழங்குடியினர், அனைத்துப் பிரிவையும் சார்ந்த மாற்றுத் திறனாளிகள், அனைத்துப் பிரிவையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.250/ ஆகும். இதர பிரிவை சார்ந்தவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.500/- ஆகும்.
விண்ணப்பக் கட்டணத்தை Online மூலம் மட்டுமே செலுத்தப்பட வேண்டும். இணைய வழிக் கட்டணம் செலுத்தும்போது ஏற்படும் இடர்ப்பாடுகளுக்கும் தோல்விகளுக்கும் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் பொறுப்பாகாது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உங்கள் மாவட்டத்தினுடைய கூட்டுறவு இணையதளம் மூலம் 01.12.2023 அன்று மாலை 5.45 மணி வரை பதிவேற்றம் செய்யலாம். கட்டணம் செலுத்தும் முறையை எந்த நேரத்திலும் மாற்றியமைக்கும் உரிமை அந்த மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்திற்கு உண்டு. ஒருமுறை செலுத்தப்பட்ட விண்ணப்பக் கட்டணம் எக்காரணத்தைக் கொண்டும் திருப்பித் தரப்பட மாட்டாது.
விண்ணப்பிக்கும் முறை
நீங்கள் இந்த தமிழ்நாடு அரசு வேலைக்கு விண்ணப்பிக்க விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள உங்கள் மாவட்டத்தினுடைய கூட்டுறவு லிங்கினை க்ளிக் செய்து உடனே விண்ணப்பித்திடுங்கள்.
SI No | Cooperative Institutions | Notification & Apply Click Here |
1. | Ariyalur Cooperative Institutions | CLICK HERE |
2. | Chengalpattu Cooperative Institutions | CLICK HERE |
3. | Coimbatore Cooperative Institutions | CLICK HERE |
4. | Chennai Cooperative Institutions | CLICK HERE |
5. | Dindigul Cooperative Institutions | CLICK HERE |
6. | Erode Cooperative Institutions | CLICK HERE |
7. | Kancheepuram Cooperative Institutions | CLICK HERE |
8. | Kallakurichi Cooperative Institutions | CLICK HERE |
9. | Kanyakumari Cooperative Institutions | CLICK HERE |
10. | Karur Cooperative Institutions | CLICK HERE |
11. | Krishnagiri Cooperative Institutions | CLICK HERE |
12. | Mayiladuthurai Cooperative Institutions | CLICK HERE |
13. | Nagapattinam Cooperative Institutions | CLICK HERE |
14. | Nilgiris Cooperative Institutions | CLICK HERE |
15. | Ramnad Cooperative Institutions | CLICK HERE |
16. | Salem Cooperative Institutions | CLICK HERE |
17. | Sivagangai Cooperative Institutions | CLICK HERE |
18. | Thirupathur Cooperative Institutions | CLICK HERE |
19. | Thiruvarur Cooperative Institutions | CLICK HERE |
20. | Thoothukudi Cooperative Institutions | CLICK HERE |
21. | Tirunelveli Cooperative Institutions | CLICK HERE |
22. | Tiruppur Cooperative Institutions | CLICK HERE |
23. | Tiruvallur Cooperative Institutions | CLICK HERE |
24. | Trichy Cooperative Institutions | CLICK HERE |
25. | Ranipet Cooperative Institutions | CLICK HERE |
26. | Thanjavur Cooperative Institutions | CLICK HERE |
27. | Tiruvannamalai Cooperative Institutions | CLICK HERE |
28. | Cuddalore Cooperative Institutions | CLICK HERE |
29. | Perambalur Cooperative Institutions | CLICK HERE |
30. | Vellore Cooperative Institutions | CLICK HERE |
31. | Virudhunagar Cooperative Institutions | CLICK HERE |
32. | Dharmapuri Cooperative Institutions | CLICK HERE |
33. | Madurai Cooperative Institutions | CLICK HERE |
34. | Namakkal Cooperative Institutions | CLICK HERE |
35. | Pudukkottai Cooperative Institutions | CLICK HERE |
36. | Tenkasi Cooperative Institutions | CLICK HERE |
37. | Theni Cooperative Institutions | CLICK HERE |
38. | Villupuram Cooperative Institutions | CLICK HERE |
மேலும் விவரங்கள்
- அதிகாரப்பூர்வ இணையதளம் (www.tndrb.gov.in)
- தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கிகள் பதிவாளரின் அலுவலகம் (044-25385100)