TNPSC தேர்வர்களே..! அதிர்ச்சியான செய்தியை டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது!

TNPSC Candidates..! TNPSC has announced the shocking news! READ IT NOW

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற குரூப்-2 தேர்வில் குளறுபடி ஏற்பட்டதையடுத்து குரூப்-2 தேர்வில் காலையில் நடைபெற்ற தமிழ் தகுதித்தேர்வின் மதிப்பெண்ணை தரவரிசை எடுத்துகொள்ள மாட்டோம் என்று டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(TNPSC) வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

காலதாமதம்

குரூப்-2, 2-ஏ பணியிடங்களுக்கான முதன்மை எழுத்து தேர்வு கடந்த 25 ஆம் தேதி 20 மாவட்டத்தில் உள்ள தேர்வு மையங்களில் நடைபெற்றது.

இதில், கட்டாய தமிழ்மொழி தகுதித்தாள் (முதல் நாள்) முற்பகலும், பொது அறிவுத்தாள் (இரண்டாம் நாள்) பிரபகலும் நடைபெற்றது. வருகை பதிவேட்டில் உள்ள தேர்வர்களின் பதிவெண்களின் வரிசையிலும் வினாத்தாளில் உள்ள பதிவெண்களின் வரிசையிலும் இருந்த வேறுபாட்டின் காரணமாக வினாத்தாள் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. இதனை ஈடு செய்யும் பொருட்டு தேர்வர்களுக்கு கூடுதல் நேரம் வழங்கப்பட்டு முற்பகல் தேர்வுகள் நடைபெற்று முடிந்தது.

தரவரிசை

இந்நிலையில், பிற்பகல் தேர்வு நேரம் மதியம் 2.30 மணிக்கு தொடங்கி 5.30 வரை நடைபெறும் வகையில் மறுவரையறை செய்யப்பட்டது. அதன்படி, பிற்பகல் தேர்வானது அனைத்து மையங்களிலும் குறித்த நேரத்தில் தொடங்கப்பட்டு சீராக எந்தவித இடர்பாடும் இன்றி நடைபெற்று முடிந்தது.

பிற்பகல் நடைபெற்ற தேர்வில் சுமார் 94.30 சதவீதம் பேர் தேர்வு எழுதினர். முற்பகலில் நடைபெற்ற தேர்வானது கட்டாய தமிழ் தகுதித்தேர்வு என்பதால் இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவது மட்டுமே போதுமானது மற்றும் இந்த மதிப்பெண்கள் தரவரிசைக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது. இது தகுதித் தேர்வு மட்டுமே என்பதுடன் தேர்வாணையத்தின் முன் அனுபவத்தின்படி 98 சதவீதத்துக்கும் கூடுதலான தேர்வர்கள் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட தமிழ் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

காரணம் என்ன?

இருப்பினும், தேர்வர்களுக்கு முற்பகல் தேர்வில் ஏற்பட்ட சிரமங்களை கருத்தில் கொண்டு தேர்வ்ர்களின் நியாயமான கோரிக்கைகள் சரியான முறையில் விடைத்தாள்கள் திருத்தும்பொழுது கருத்தில் கொள்ளப்படும். தேர்வாணையத்தின் அறிவுறுத்தலின்படி, பிற்பகல் தேர்வுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டமையால் பிற்பகல் தரவரிசைக்கு கருதப்படும் பொது அறிவுத்தாள் தேர்வு எந்தவித இடையூறும் இன்றி அனைத்து தேர்வு மையங்களிலும் சுமூகமாக நடைபெற்று முடிந்தது. மேலும், இந்த இரண்டாம் தாளில் தேர்வர்கள் பெரும் மதிப்பெண்கள் மட்டுமே தரவரிசைக்கு எடுத்துக்கொள்ளப்படும். இந்த வினாத்தாள் மற்றும் விடைத்தாள் தொகுப்புக்கும், வருகை பதிவேட்டுக்கும் இடையிலான வரிசை வேறுபாடே முற்பகல் தேர்வில் காலதாமதத்துக்கு காரணம். இந்த வேறுபாடு ஏற்பட காரணமான அனைவரது மீதும் தேர்வாணையம் கடிமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.

SOURCE LINK


RECENT POSTS IN JOBSTAMIL.IN

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here