TNPSC தேர்வில் வெற்றி பெற வேண்டுமா?

0
TNPSC Exam Pass Tips in Tamil

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வில் வெற்றிப் பெறுவதற்கும் மற்றும் அதற்கு எப்படி தயாராகுவது என்பதற்கும் இது சிறந்த ஒரு தளமாக விளக்கும்.

பட்டப்படிப்பு முடித்தவர்கள் முதல் பள்ளி படிப்பை முடித்தவர்கள் வரை அனைவரும் பங்கு எடுத்து வெற்றி பெற இது ஒரு சிறந்த ஒரு வாய்ப்பாக இருக்கும்.

TNPSC தேர்வில் பங்கு கொள்ளும் தேர்வர்கள் சிறந்த வழிகாட்டுதல் மூலம் பயிற்சி பெற்று எளிதில் தங்களது குறிக்கோளை அடையலாம். மேலும் மெரிட்டில் பாஸ் செய்வதற்கு எவ்வாறு தங்களை தயார் படுத்திக் கொள்வது என்பதைப் பற்றியும் இதில் விரிவாக அறிந்து கொள்ள முடியும்.

1. போட்டித் தேர்விற்கு எவ்வாறு ஆயத்தம் செய்வது?

போட்டித் தேர்விற்கு எவ்வாறு ஆயத்தம் செய்வது

போட்டித் தேர்விற்கு தங்களை ஆயத்தம் செய்து கொள்வதற்கு திட்டமிடுதல் மற்றும் அதற்கு பயிற்சி செய்வது போன்றவை மிகவும் இன்றியமையாத ஒன்றாக இருக்கும். டிஎன்பிஎஸ்சி தேர்வில் தனக்கு தானே தயார் செய்து கொள்ள முடியுமா? என பலருக்கும் இந்த கேள்விகள் தோன்றும். எனவே நம்மால் முடியாத ஒன்றுமில்லை என்று செய்து காட்ட வேண்டும்.

முதலில் தங்களை அதற்கும் ஆயத்தம்(தயார்) செய்து கொள்வதற்கு பள்ளி வகுப்பு பாடப்புத்தகங்கள் மூலம் தங்களது பயிற்சியை தொடங்கி அறிவை வளர்த்து கொள்ள மிகவும் உதவும்.

2. முதற்கட்ட முன்னேற்பாடுகள்:

முதற்கட்ட முன்னேற்பாடுகள்

தேரவில் வெற்றி பெறும் தேர்வர் முதற்கட்ட பயிற்சியை தொடங்குவது என்பது ஒன்று முதல் பாத்தம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகங்கள் படிப்பது. ஏன் ஒன்று முதல் படிக்க வேண்டும் என வினா எழும், ஏனெனில் முதல் வகுப்பில் இருந்து ஒரு சிறிய கேள்வி வரும் போது அதற்கு விடை தெரியாவிட்டால் சான்ஸ் குறைந்துவிடும் ஆபத்து உள்ளது அல்லவா?

எடுத்துக்காட்டாக: ஆந்தை-அலறும் என்பது சிறுவயது பாடப்புத்தகத்தில் இடம் பெற்றதே, இதற்கு தான் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பாடம் படிக்க வேண்டும் என்று சொல்லுவது.

முடிந்த வரை எல்லாத்தையும் படிக்க வேண்டும். இந்த மனநிலை தான் தேர்வில் வெற்றிப் பெற உதவும். மேலும் போட்டித் தேர்விற்கு தயாராகுபவர்கள் எந்த ஒரு தகவலையும் தேவையில்லை என்று ஒதுக்கக் கூடாது.

3. தேர்விற்கு தயார் செய்யும் முறைகள்:

தேர்விற்கு தயார் செய்யும் முறைகள்

TNPSC தேர்வில் ஒன்றாக உள்ள Group-4 தேர்வு இரு பகுதிகள் உள்ளடக்கியது.

1.மொழித்தாள்
2.பொதுப்பாடத் தாள்

இதில் முதல் பகுதியான மொழித்தாளில் 100 வினாக்கள் கேட்கப்படும். ஒரு வினாவிற்கு 1.5 மதிப்பெண் வீதம் மொத்தம் 150 மதிப்பெண்ணும், இரண்டாம் பகுதியில் 150 மதிப்பெண்ணும் என மொத்தம் 300 மதிபெண்கள் இருக்கும்.

இதில் தவறாக விடை அளித்தால் மைனஸ் மதிப்பெண் கிடையாது. இருந்தாலும் முடிந்த அளவிற்கு சரியான பதில் அளிப்பது நல்லது. பதில் தெரியவில்லை என்றாலும் அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க வேண்டும். மேலும், தினந்தோறும் செய்தித்தாள் படிப்பது மிகவும் நல்லத்தான ஒன்று. இதில் பொது அறிவு எனப்படும் தற்போதை நிகழ்வுகளை அறிந்து கொள்ள முடியும். நாம் படிக்கும் விதம் சற்றும் எளிதாக இருக்கும் போது இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவது மிகவும் எளிது.


RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here