தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (Tamil Nadu Public Service Commission TNPSC) மூலம் போட்டித் தேர்வுகளை நடத்தி அதன் மூலம் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
அந்த வகையில், தமிழக அரசின் உயர்நிலை பணிக்கான குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வு வருகிற 25 ஆம் தேதி தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தால்(TNPSC) நடத்தப்படுகிறது.
இந்நிலையில், குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வெழுதும் தேர்வர்களுக்கான நுழைவுச் சீட்டு(Hall Ticket) இன்று(வியாழக்கிழமை) வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான முதல்நிலை தேர்வினை சுமார் 10 லட்சம் பேர் எழுதினர். அதில் சுமார் 58 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்ற நிலையில், முதன்மை தேர்வை எழுத உள்ளனர். இதற்கான நுழைவுச் சீட்டினை அதன் அதிகார்வபூர்வ தளமான https://www.tnpsc.gov.in/ என்ற இணையப்பக்கத்தின் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
RECENT POSTS IN JOBSTAMIL
- இந்தியாவின் எந்த இடத்திலும் வேலை செய்யலாம்! 69 பணிகளை UPSC வெளியிட்டுள்ளது! Apply Online Here!
- IIT மெட்ராஸில் சூப்பரான வேலை! மாதம் ரூ.40000 முதல் ரூ.60000 வரை சம்பளம் வழங்கப்படும் @ www.iitm.ac.in
- திருப்பதி செல்லும் பக்தர்களா நீங்க.. இதோ உங்களுக்காக சூப்பர் குட் நியூஸ்..!
- இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தில் வேலை! விண்ணப்பிக்க ரெடியா?
- 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத போறீங்களா.. அப்ப இந்த செய்தி உங்களுக்குத்தான்..! உடனே பாருங்க…