TNPSC குரூப்-4 ரிசல்ட்..! தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அறிவித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு @ www.tnpsc.gov.in

TNPSC Group-4 Result Official notification announced by the Controller of TNPSC Examinations at www.tnpsc.gov.in

தமிழக அரசில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் பல்வேறு வகையான தேர்வுகளை நடத்தி வருகிறது. கடந்த வருடம் 24/07/2022 அன்று குரூப் 4 எழுத்துத்தேர்வினை TNPSC நடத்தி முடித்தது. இந்த தேர்விற்கு 22,02,942 பேர்கள் விண்ணப்பித்திருந்தனர். 18,36,535 மட்டுமே இந்த தேர்வில் பங்கேற்று தேர்வை எழுதி முடித்தனர். இதற்கான முடிவுகளை தேர்வர்கள் அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

கடந்த ஆண்டில் நடந்து முடிந்த GROUP 4 தேர்வு முடிவுகள் பிப்ரவரி மாதம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தேர்வர்கள் அனைவரும் தேர்வு முடிவுகளை எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில்… தற்போது தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வு முடிவுகள் வருகிற மார்ச் மாதம் வெளியிடப்படும் என்றும், தேர்வு முடிவுகள் பற்றி வெளிவரும் ஆதாரமில்லாத தகவல்களை தேர்வர்கள் நம்ப வேண்டாம் என்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அறிவித்துள்ளார்.

SOURCE LINK


RECENT POSTS IN JOBSTAMIL.IN

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here