செய்திகள்10ஆம் வகுப்புதமிழ்நாடுதமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு

TNPSC குரூப்4 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களுக்கான அடுத்த அறிவிப்பு..!

TNPSC Group4 Jobs Updates VAO Typist

TNPSC – தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 சான்றிதழ் பதிவேற்றம் தொடர்பாக முக்கிய ஓர் அறிவிப்பை TNPSC வெளியிட்டுள்ளது

TNPSC குரூப் 4 தேர்வுகள்

தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் (VAO), இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்காக TNPSC குரூப் 4 தேர்வுகள் கடந்த செப்டம்பர் மாதம் நடத்தப்பட்டது. தேர்வு முடிவுகள் 2019 நவம்பர் 12 ஆம் தேதி வெளியிடப்பட்டது

தேர்வு முடிவுகள்

இதுவரை வழக்கமாக TNPSC தேர்வுகள் நடந்தால், அந்த தேர்வு முடிவுகள் வெளியிட மாதக்கணக்கில் ஆகும். ஆனால், இம்முறை தேர்வு முடிவுகள், வெறும் 72 நாளில் வெளியிடப்பட்டது. மேலும், இனி வரும் காலங்களிலும் டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளின் முடிவுகள் உடனுக்குடன் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சான்றிதழ் சரிபார்ப்பு TNPSC குரூப் 4 :

TNPSC குரூப் 4 தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்கள், சுமார் 27 ஆயிரம் பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 5 முதல் 18 ஆம் தேதிக்குள் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக தேர்ச்சிப் பெற்றவர்கள் தங்களுடைய கல்விச்சான்றிதழ் அனைத்தையும் டி.என்.பி.எஸ்.சி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அழைப்பு விடுக்கப்பட்டவர்களில் 1:3 என்ற விகிதத்தில் தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

சான்றிதழ் பதிவேற்ற கடைசி தேதி:

இத்தேர்வு குறித்த அறிவிப்பில் சான்றிதழ் சரிபார்ப்பு பணி தொடர்பாக செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இதுவரையில், சுமார் 12 ஆயிரத்துக்கும் அதிகமானோர் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்துள்ளனர். மீதம் உள்ளவர்களும் தங்களுடைய சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய டிசம்பர் 18 ஆம் தேதி வரையில் அவகாசம் விதிக்கப்பட்டுள்ளது.

முக்கிய குறிப்பு (கவனம் தேவை)

மேலும், சான்றிதழ் பதிவேற்றம் செய்யும் போது அனைத்து சான்றிதழ்களும் சரியாக, தெளிவாக, ஒழுங்காக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதை விண்ணப்பதாரர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும். அரசு இ சேவை மையங்கள் மூலமாக சான்றிதழ் பதிவேற்றம் செய்தாலும், அவைகள் ஒழுங்காக பதிவேற்றம் செய்யப்பட்டிருப்தை உறுதி செய்து விண்ணப்பதாரர்களின் பொறுப்பாகும். சரியாக, தெளிவாக இல்லாத சான்றிதழ்கள் நிராகரிக்கப்படும்

சான்றிதழ் பதிவேற்றம் செய்தவர்கள் கவனத்திற்கு

ஏற்கனவே சான்றிதழ் பதிவேற்றம் செய்த விண்ணப்பதாரர்கள், மீண்டும் ஒரு முறை அனைத்து சான்றிதழ்களும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ளவும். ஒரு வேளை ஏதாவது ஒரு சான்றிதழ் தவறுதலாகவோ, தொழில்நுட்ப கோளாறு காரணமாகவோ பதிவேற்றம் ஆகாமல் இருந்தால் அதனை மீண்டும் பதிவேற்றம் செய்ய முடியும்.

​ஆன்லைனில் குரூப் 4 சான்றிதழ் பதிவேற்றம் செய்வது எப்படி?

தேர்ச்சி பெற்றவர்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளம் வாயிலாக தங்களுடைய சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யலாம். நிரந்தர பதிவு எண்ணை பயன்படுத்தி TNPSC இணையதளத்தில் உள்நுழைய வேண்டும். பின்பு கொடுக்கப்பட்டிருக்கும் வழிமுறைகளை பின்பற்றி, சான்றிதழ்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக ஸ்கேன் செய்து, அவைகளை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

பதிவேற்றும் வழிகள்

ஆன்லைன் வசதி இல்லாத விண்ணப்பதாரர்கள், தங்களுக்கு அருகில் உள்ள அரசு இ-சேவை மையங்களை (e-services) அணுகி, சான்றிதழ்களை பதிவேற்றலாம். அல்லது தனியார் கணினி மையம் (browsing centre-க்குச் சென்று சான்றிதழ் பதிவேற்றம் செய்யலாம்.

 



TNPSC குரூப்4 தேர்வு எழுதியவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி 9,398 காலியிடங்கள் அறிவிப்பு..! டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தற்போது காலியிடங்களின் எண்ணிக்கை 6,491 இல் இருந்து 9,398 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. TNPSC Group4 Jobs Updates VAO Typist குரூப் 4 காலி இடங்களை 6,491-ல் இருந்து கூடுதலாக 2,907 இடங்கள் அதிகரித்து 9,398 இடங்களாக தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

TNPSC Group4 Jobs Updates VAO Typist

தமிழக அரசில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் (VAO), இளநிலை உதவியாளர் (Junior Assistant), சுருக்கெழுத்தர் தட்டச்சர் (Typist) என 6,491 பணியிடங்களை நிரப்புவதற்கு டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுகள் அறிவிக்கப்பட்டது. அதன்படி, செப்டம்பர் 1 ஆம் தேதி தமிழகம் முழுவதும் குரூப் 4 இந்த தேர்வினை 16,29,865 பேர் எழுதினர். 2019 தேர்வு முடிவுகள் நவம்பர் 12 ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், தற்போது குரூப் 4 பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 6,491 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது 2,907 காலியிடங்கள் உயர்த்தப்பட்டு, 9,938 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால், TNPSC 2019 குரூப் 4 தேர்வு எழுதியதில் தேர்ச்சி பெற்ற கூடுதலானவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

விண்ணப்பதாரர்கள் தங்களது தேர்வு முடிவுகளை டி.என்.பி.எஸ்.சி.,யின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnpsc.gov.in என்ற பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.

தற்போது காலிப்பணியிடங்கள் அதிகரித்துள்ளதன்படி, தேர்வு எழுதியர்களின் மதிப்பெண் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள் என தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

 


 

TNPSC – டிஎன்பிஎஸ்சி தமிழக அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம்  குரூப் 4 பணி தேர்வுக்கான(TNPSC CCSE 4 Recruitment 2019 6491 Posts) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-4 (தொகுதி-IV) 2018-2019 மற்றும் 2019-2020 ஆம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு இளநிலை உதவியாளர், தட்டச்சர், நில அளவையர், கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) அமைச்சுப்பணி, தமிழ்நாடு நீதி அமைச்சுப் பணி, தமிழ்நாடு நில அளவை மற்றும் நில பதிவேடுகள் சார் நிலைப்பணி, தமிழ்நாடு தலைமைச் செயலகப்பணி மற்றும் தமிழ்நாடு சட்டமன்ற பேரவைச் செயலகப் பணிகளில் அடங்கிய கீழ்காணும் பதவிகளுக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்விற்கு 14.07.2019 அன்று வரை இணைய வழி மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. TNPSC Group4 Jobs Updates VAO Typist

இது பற்றிய விபரம் பின்வருமாறு:

TNPSC Group4 Jobs Updates VAO Typist

நிறுவனத்தின் பெயர்: தமிழ்நாடு பொது சேவை ஆணையம்(TNPSC)
பதவி: இளநிலை உதவியாளர், தட்டச்சர், நில அளவையர், விஏஓ, ect.,
காலியிடங்கள்: 6491
கல்வித்தகுதி: 10th, Any Graduate
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு.
விண்ணப்பம் தொடக்க நாள்: 14.06.2019
விண்ணப்பம் முடியும் நாள்: 14.07.2019
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

ICF-சென்னை ஐசிஎஃப்-இல் 992 பயிற்சி பணிகள் பத்தாம் வகுப்பு ஐடிஐ முடித்தவர்களுக்கு வேலை

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு 2019 காலியிடங்கள் விவரங்கள்:

  • Village Administrative Officer: 397
  • Junior Assistant (Non – Security): 2688
  • Junior Assistant (Security): 104
  • Bill Collector, Grade-I: 39
  • Field Surveyor: 509
  • Draftsman: 74
  • Typist: 1901
  • Steno-Typist (Grade–III): 784
    மொத்த காலியிடங்கள் : 6491

டிஎன்பிஎஸ்சி (TNPSC) குரூப் 4 தேர்வு 2019

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு 2019 கல்வி தகுதி:

  • 10 வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அதேபோல் Typewriting முடித்திருக்க வேண்டும்.
    கல்வி தகுதி பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள TNPSC Group 4 Notification 2019 கிளிக் செய்து பார்க்கவும்.

டிஎன்பிஎஸ்சி (TNPSC) குரூப் 4 தேர்வு 2019

டிஎன்பிஎஸ்சி (TNPSC) குரூப் 4 தேர்வு 2019 Qualification

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு 2019 விண்ணப்ப கட்டணம்:

  • பதிவு கட்டணம் 150/-
  • விண்ணப்ப கட்டணம் 100/-

TNPSC CCSE 4 Vacancy 2019 விண்ணப்ப கட்டணம்:

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு 2019 விண்ணப்ப முறை:

  • ஆன்லைன்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு (TNPSC Group 4 Exam) எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

  • TNPSC Group 4 Exam) tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
    அவற்றில் தற்போதைய வேலைவாய்ப்பு காலியிடத்தின்
  • (TNPSC Group 4 Notification 2019) விளம்பரத்தை தேர்வு செய்ய வேண்டும்.
  • பின்பு விளம்பரத்தை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும், தாங்கள் தகுதிவாய்ந்தவர்களாக இருந்தால் உடனே இந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு
  • (TNPSC Group 4 Exam) காலியிடத்திற்கு விண்ணப்பிக்கவும்.
    இறுதியாக தங்களது எதிர்கால பயன்பாட்டிற்க்கு விண்ணப்ப படிவத்தை ஒரு ப்ரிண்ட் அவுட்டு எடுத்து கொள்ளவும்.

TNPSC வேலைவாய்ப்பு 2019 அறிவிப்பு & பயன்பாட்டு இணைப்பு:

TNPSC வேலைவாய்ப்பு 2019 அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF: இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker