TNPSC தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு… சற்றுமுன் தேர்வு தேதியை அறிவித்தது தேர்வாணையம்! Get TNPSC Latest News…

Tamil Nadu Public Service Commission

TNPSC Latest News 2022: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஒவ்வொரு ஆண்டும் TNPSC Group 1, TNPSC Group 2 & 2A, TNPSC Group 4 போன்ற பல்வேறு தேர்வுகளை நடத்தி வருகிறது. தமிழ்நாடு அரசு துறைகளில் எண்ணற்ற வேலைகள் கொட்டிக்கிடக்கின்றன. TNPSC தேர்வுகள் நடத்துவதன் மூலம் நேரடியாக பணி நியமனம் செய்யப்படுகிறது. தகுதி வாய்ந்த அனைவரும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம். தொடர் முயர்ச்சியும், தன்னம்பிக்கையும் உள்ளவர்கள் இந்த தேர்வுகளில் எளிதாக வெற்றி பெற முடியும்.

TNPSC Latest News Updates Now

TNPSC Latest News Updates Now

TNPSC Latest News Just Now Released

செய்தி வெளியீட்டு எண் : 03/2022

நாள்: 12.01.2022

22.01.2022 முற்பகல் மற்றும் பிற்பகலில் நடைபெறவுள்ள தமிழ்நாடு பொது சார்நிலை பணிகளில் அடங்கிய ஆராய்ச்சி உதவியாளர் (மதிப்பீடு மற்றும் செயல்முறை ஆராய்ச்சித் துறை) பதவிகளுக்கான எழுத்துத்தேர்வு (கோள்குறிவகை).

செய்திக்குறிப்பு

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண் : 17/2021, நாள் 20.10.2021-ன் வாயிலாக நேரடி நியமனத்திற்கு அறிவிக்கை செய்யப்பட்ட தமிழ்நாடு பொது சார்நிலைப் பணிகளில் அடங்கிய ஆராய்ச்சி உதவியாளர் (மதிப்பீடு மற்றும் செயல்முறை ஆராய்ச்சித் துறை) பதவிகளுக்கான எழுத்துத்தேர்வு (கோள்குறிவகை) 22.01.2022 (முற்பகல் மற்றும் பிற்பகல்) நடைபெற உள்ளது.

தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட நுழைவு சீட்டுகள் (Hall Ticket) தேர்வாணையத்தின் இணணயதளமான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in-ல் பதிவேற்றம்
செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் (OTR) மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவு சீட்டினை
(Hall Ticket) பதிவிறக்கம் செய்ய முடியும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் கீழ்கண்ட அறிவுரைகளை கவனமாக குறித்துக் கொள்ளவும்:

அ. தேர்வர்கள் விடைத்தாளில் விவரங்களை பூர்த்தி செய்யவும் விடைகளை குறிக்கவும் கருப்பு நிற மை பந்து முனை பேனா மட்டுமே பயன்படுத்த வேண்டும் தவறினால் அவ்வாறான விடைத்தாள்கள் தேர்வாணணயத்தால் செல்லாததாக்கப்படும்.

ஆ. எந்த ஒரு தேர்வரும் முற்பகலில் நடைபெறும் தேர்விற்கு 09.15 மணிக்குப் பின்னர் தேர்வுக்கூடத்திற்குள் நுழையவோ 1.15 மணிக்கு முன்னர் தேர்வுக்கூடத்திலிருந்து வெளியேறவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள். எந்த ஒரு தேர்வரும் பிற்பகலில் நடைபெறும் தேர்விற்கு 2.15 மணிக்குப் பின்னர் தேர்வுக்கூடத்திற்குள் நுழையவோ 5.15 மணிக்கு முன்னர் தேர்வுக்கூடத்திலிருந்து வெளியேறவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

இ. விண்ணப்பதாரர்கள் தமக்கு ஒதுக்கப்பட்ட தேர்வுக்கூடம் அமைந்துள்ள இடத்தினை எளிதில் தெரிந்துகொள்ளும் பொருட்டு தேர்வுக்கூட நுழைவுசீட்டில், விரைவுத்தகவல் குறியீடு (QR CODE) அச்சிடப்பட்டுள்ளது. இதனை விரைவுத்தகவல் குறியீட்டு செயலி மூலம் ஸ்கேன் செய்து தேர்வுக்கூடம் அமைந்துள்ள இடத்தினை Google Maps மூலமாக தெரிந்து கொண்டு பயன் பெறலாம்.

ஈ. தேர்வு அறைக்குள் அலைபேசி மற்றும் வேறு ஏதேனும் மின்னணு உபகரணங்கள் கொண்டுசெல்ல அனுமதியில்லை. எனவே விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகளில் பத்தி எண் 17 (A) (iv)ல் உள்ள குறிப்பின் படி தங்களது அலைபேசி உட்பட பிற உடைமைகளை தேர்வுமையத்திலுள்ள பாதுகாப்பு அறையில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இருப்பினும் சொந்த உடமைகளை பாதுகாப்பு அறையில் வைப்பது தேர்வரின் சொந்த பொறுப்பிற்குட்பட்டதாகும்.

தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர்

TNPSC Latest News Official Notification Link


Today Jobs:

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button