TNPSC Latest News Updates: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Tamil Nadu Public Service Commission-TNPSC) என்பது தமிழக அரசுப் பணிக்குத் தேவையானவர்களை தகுந்த போட்டித் தேர்வுகள் வாயிலாகத் தேர்வு செய்ய ஏற்படுத்தப்பட்ட ஒரு அரசு சார்ந்த அமைப்பு. இது இந்தியாவில் மாநில அளவில் உருவாக்கப்பட்ட முதல் தேர்வாணையமாகும். TNPSC News in Tamil 2021 உடனுக்குடன் இந்த பக்கத்தில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
TNPSC சமீபத்திய செய்திகள்!
TNPSC Latest News Updates 2021
நிறுவனத்தின் பெயர் | தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Tamil Nadu Public Service Commission) |
வலைத்தளம் | tnpsc.gov.in |
சுருக்கம் | TNPSC |
உருவாக்கம் | 1929 |
வகை | அரசு |
நோக்கம் | அரசுப் பணிக்கு தேர்வு செய்தல் |
தலைமையகம் | சென்னை |
தலைவர் | கே. அருள்மொழி |
செயலர் | எம். விஜயகுமார் |
News – 01
TNPSC தற்போதைய செய்தி:
டி.என்.பி.எஸ்.சி (TNPSC) தேர்வுகள் நிச்சயம் நடத்தப்படும்!! செயலாளர் அறிவிப்பு!.. கொரோனாத் தொற்று தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதன் காரணமாக பல்வேறு துறைகள் முற்றிலும் முடங்கியுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன.
அனைத்து போட்டித் தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கொரோனா தொற்று முற்றிலும் ஒழிக்கப்பட்டவுடன் டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் நிச்சயம் நடத்தப்படும் எனவும், தேர்வுக்காக காத்திருப்பவர்கள் நம்பிக்கை இழக்க வேண்டாம் எனவும் TNPSC அறிவித்துள்ளது.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாத் தொற்றால் தமிழகத்தில் அசாதாரணமான சூழல் நிலவி வருகிறது. நிலைமைகள் சீரான உடன், டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள் நடத்தப்படும். தேர்வுக்கு தயாராக தேர்வர்களுக்கு கால அவகாசம் வழங்கப்படும். Group1 , Group 2 தேர்வுக்கு இடையே உள்ள காலமும் நீட்டிக்கப்படும் எனவும் உறுதி பட தெரிவித்துள்ளது டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள் இயக்குநரகம்.
News – 02
TNPSC News
தேர்வு எழுதுபவர்கள், பொது மக்கள் தங்கள் குறைகள மற்றும் புகார்களை நேரடியாக தெரிவிக்க செல்போன் செயலியை உருவாக்க TNPSC முடிவு செய்துள்ளது.
தகுதியுடைய நிறுவனங்கள் ஜுன் 22-ஆம் தேதிக்குள் தங்களது ஒப்பந்த புள்ளிகளை சமர்ப்பிக்கலாம்.
ஒப்பந்தம் கோர விரும்பும் நிறுவனங்கள், அதற்கான வழிமுறைகளை www.tenders.tn.gov.in, www.tnpsc.gov.in என்ற இணைய தளத்தில் அறிந்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள லிங்கை க்ளிக் செய்து பார்க்கவும்.
முக்கியமான இணைப்புகள்:
TNPSC Tender Notification Details
மேலும் வேலைவாய்ப்பு விவரங்களுக்கு:
எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:
Facebook Page Link: Jobs Tamil Joint Now
Whatsapp Group: Jobs Tamil Joint Now
Twitter Page: Jobs Tamil Joint Now