தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (Tamil Nadu Public Service Commission) போட்டித் தேர்வுகள் மூலம் அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புகிறது. இதற்காக TNPSC குரூப்-1, குரூப்-2 போன்ற பல்வேறு போட்டித் தேர்வுகளை நடத்தி அதன் மூலம் தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு பணி நியமனம் செய்யப்படுகிறது.
TNPSC துறைத் தேர்வுக்கான தேதி – வெளியீடு!
இந்நிலையில், தற்பொழுது TNPSC ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், நடப்பாண்டு நடைபெறும் துறைத் தேர்வுகளுக்கான தேர்வு தேதியை அறிவித்துள்ளது. அதன்படி, மே மாதத்திற்கான துறை தேர்வானது Objective Type முறையில் COMPUTER மூலம் நடத்தப்படும். இந்த தேர்வுகள் வருகிற மே மாதம் 15.05.2023 முதல் 19.05.2023 வரையிலும் நடைபெற உள்ளது.
அதேபோல், இதற்கு அடுத்த தேர்வானது Descriptive Type மூலம் நடத்தப்படும். இந்த தேர்வுகள் வருகிற 22.05.2023 முதல் 25.05.2023 வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வுகள் காலை மாலை என இரு கட்டங்களாக நடைபெறும். காலையில் நடைபெறும் தேர்வானது காலை 9.30 மணியளவில் தொடங்கும் என்றும் மாலையில் நடைபெறும் தேர்வானது மதியம் 2.30 மணியளவில் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்படுள்ளது.
மேலும், TNPSC தேர்வர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தியையும் தெரிவித்துள்ளது. அதில், தேர்வர்கள் தேர்வு நடைபெறும் முன்கூட்டியே வருகை தந்திருக்க வேண்டும். தேர்வு நேரத்திற்கு பிறகு வரும் தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படாது என்றும் தெரிவித்துள்ளது.
RECENT POSTS IN JOBSTAMIL.IN
- முதல்வர் அறிவிப்பு: சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் தமிழ்மொழி கட்டாயம்..!
- ஜூன் 1 ஆம் தேதி முதல் புத்தம் புதிய மாற்றாங்களா? சூப்பர்..!
- மெட்ரோ ரயில் நிலையத்துக்கு போகணுமா? ஈஸியா போகலாம்! நீங்களும் படிச்சு தெரிஞ்சுக்கோங்க!
- சூப்பரான செய்தியை ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்! என்னனு தெரியுமா உங்களுக்கு?
- தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு! ரேஷன் கார்டு வச்சிருக்க உங்களுக்குத்தான்..! படிச்சு தெரிஞ்சுக்கோங்க!