சற்றுமுன் TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..! மிஸ் பண்ணாம படிங்க…

TNPSC recently released an important announcement now Dont miss and read it here

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (Tamil Nadu Public Service Commission) என்பது போட்டித் தேர்வுகள் மூலம் அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புகிறது. இந்த போட்டித் தேர்வுகள் மூலம் விண்ணப்பத்தாரர்கள் நேரடியாக பணி நியமனம் செய்யப்படுகிறார்கள். இந்நிலையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(TNPSC) தற்பொழுது மிக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

TNPSC வெளியிட்டுள்ள அறிவிப்பில், நிலஅளவர்‌, வரைவாளர்‌ மற்றும்‌ உதவி வரைவாளர்‌ ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வானது கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்றது. இதற்கான முடிவுகள் கடந்த பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி அரசு பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டது. இதில் தேர்ச்சி பெர்ரவர்களுக்குக்கான இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு பணியானது வருகிற மே 23 ஆம் தேதி சென்னையில் உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு கலந்தாய்வில் கலந்து கொள்வதற்கான முழு விவரங்களும் அவர்களுக்கு EMAIL அல்லது SMS மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண் மற்றும் தரவரிசை பட்டியில் அடிப்படையில் மட்டுமே அவர்கள் கலந்தாய்விற்கு அனுப்பப்படுவார்ர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. அதுமட்டுமல்லாமல், கலந்தாய்விற்கு அழைக்கப்படும் அனைவருக்கும் பணி நியமனம்‌ வழங்கப்படும்‌ என்பதற்கான உறுதி அளிக்க இயலாது எனவும்‌ கலந்தாய்விற்கு வர தவறினால்‌ அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது எனவும்‌ TNPSC அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


RECENT POSTS IN JOBSTAMIL.IN