தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையில் (TNRD) வேலை! எட்டாவது படித்திருந்தாலே விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையில் வேலை
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையில் வேலை

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையில் (TNRD) ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியில் காலியிடம் இருப்பதாக அறிவித்துள்ளது. இப்பணியில் மொத்தம் 24 காலியிடங்கள் உள்ளது. 8வது படித்திருந்தால் மட்டுமே போதுமானது. நவம்பர் 24 வரை ஆப்லைனில் விண்ணப்பித்து கொள்ளலாம். இதற்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. தேர்வு செய்யப்படுபவர்களுக்கு விழுப்புரத்தில் வேலை கிடைக்கும். அலுவலக உதவியாளர் பணியில் 19 காலியிடமும், ஓட்டுநர் பணியில் 5 காலியிடமும் உள்ளது.

ALSO READ : ரூ.51,300-2,80,000 சம்பளத்தில் இந்திய தனித்துவ ஆணையம் (UIDAI) வேலைகள் அறிவிப்பு!

இப்பணிக்கு வயது வரம்பு குறைந்தபட்சமாக 18, அதிகபட்சமாக 53 ஆக இருக்க வேண்டும். விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை. அலுவலக உதவியாளர் பணிக்கு மாத சம்பளம் ரூ.15,700- 58,100/- ஓட்டுநர் பணிக்கு ரூ.19,500-62,000/- வழங்கப்படும். நேரடி நேர்காணல் முறையின் மூலம் இந்த இரண்டு பணிக்கும் நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

TNRD அதிகாரபூர்வ இணையதளத்தில் உள்ள படிவத்தை பூர்த்தி செய்து அதில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு விண்ணப்பதை அனுப்பவும். மேலும் இது சம்பந்தமான தகவல்களை Official Notification மற்றும் Official Website பெறலாம்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்