தமிழ்நாடு அரசின் TNRD வேலைவாய்ப்புகள்! தமிழில் எழுத படிக்க தெரிந்தாலே விருதுநகர் மாவட்டத்தில் வேலை செய்யலாம்!

TNRD Jobs notification released 06.11.2023 If you know how to read and write in Tamil get govt of tamil nadu job
தமிழ்நாடு அரசின் TNRD வேலைவாய்ப்புகள்!

தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கி வருகிற முக்கியாமான துறைகளுள் ஒன்றுதான் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை ஆகும். தற்போது விருதுநகர் மாவட்டத்தில் TNRD வேலை அறிவிப்பு வந்துள்ளது. அரசு வேலையில் ஆர்வம் இருக்க அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வேலையில் சேருங்கள்.

வேலை பற்றிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர் : தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை விருதுநகர் (Tamilnadu Rural Development and Panchayat Raj Department Virudhunagar – TNRD Virudhunagar)

இப்போது வந்துள்ள அறிவிப்பின்படி, இரவு காவல்காரன் (Night Watchman) பணிக்கு பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள். இந்த தமிழ்நாடு அரசு வேலைக்கு விண்ணப்பிக்க தமிழில் எழுத படிக்க (Read Write in Tamil) தெரிந்திருந்தாலே போதும். Night Watchman வேலைக்கு ஒரு காலியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அனைவரும் அஞ்சல் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும், 18 வயது முதல் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும். விண்ணப்ப கட்டணமாக பணம் எதுவும் செலுத்த தேவையில்லை. ஒவ்வொரு மாசமும் தமிழ்நாடு அரசு சம்பளமாக 15,700 முதல் 50,000 வரை வாங்கிக்கொள்ளலாம். நேர்காணல் முறையில் பணியாட்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நவம்பர் மாதம் 26 ஆம் தேதி பிற்பகல் 05.45 மணிக்குள் “ஆணையாளர், ஊராட்சி ஒன்றியம், சிவகாசி” என்ற முகவரிக்கு நேரடியாகவோ அல்லது பதிவுத் தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை விருதுநகர் வேலை பற்றிய அனைத்து தகவல்களுக்கும் TNRD Notification & Application form PDF லிங்கை படித்து அறிந்து கொண்டு, விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்புங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்