TNRD Ramanathapuram Recruitment 2023: இராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் (TNRD Ramanathapuram) காலியாக உள்ள இரவுக்காவலர் காலிப்பணியிடத்திற்கு நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் ராமநாதபுர மாவட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பில், விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 18 வயது மற்றும் அதிகபட்சம் 32 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் நபர்க்கு மாதம் ரூ.15700 முதல் ரூ.50000 வரை சம்பளம் வழங்கப்படும்.
TNRD Ramanathapuram வேலை பற்றிய அனைத்து தகவல்களுக்கும் TNRD Notification & Application form PDF லிங்கை படித்து அறிந்து கொண்டு, விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்புங்கள்.