தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை (TNRD) தர்மபுரி மாவட்டத்தில் இரவு காவலர், ஈப்பு ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் பதவிகளுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 09 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த அறிவிப்பின் படி, பணிக்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து தகுதி விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கி உள்ளோம். தகுதியான மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆஃப்லைன் விண்ணப்பங்களை அழைக்கிறது.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை வேலைக்கு, நீங்கள் எழுதவும், படிக்கவும், எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும் மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். இந்த பக்கத்தின் மூலமாக உங்கள் கல்வி தகுதிக்கு ஏற்ப அந்தந்த பதவிக்கு விண்ணப்பித்து உடனே வேலை பெறுங்கள். 01.07.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் வேட்பாளர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 53 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
விண்ணப்பிக்க வேண்டிய முறை:
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக https://dharmapuri.nic.in/notice_category/recruitment/ என்ற இணைய முகவரியில் உள்ள விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கி, அதை நிரப்பி, அனைத்து தேவையான ஆவணங்களுடன் 21.11.2023க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
- இணையதளம்: https://dharmapuri.nic.in/
- தொலைபேசி: 04292 235555
ஈப்பு ஓட்டுநர் நிபந்தனைகள்:
- தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தினை www.dharmapuri.tn.nic.in இணையதளத்திலும் தேசிய தொழில் நெறி வழிகாட்டு மைய இணையதளத்திலும் (National Career Service Portal) www.ncs.gov.in உள்ள விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும்.
2.1988 ஆம் ஆண்டு மோட்டார் வாகனச் சட்டப்படி தகுதியான அலுவலரால் வழங்கப்பட்ட ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். - வாகனம் ஒட்டுவதில் குறைந்தபட்சம் ஐந்தாண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, 13.11.2023 முதல் 21.11.2023 வரை அலுவலக வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 05.45 மணி வரை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி), மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (வளர்ச்சிப் பிரிவு), இரண்டாவது தளம், தருமபுரி 636705 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பப்பட வேண்டும்.
- இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தில் உள்ள விவரங்கள் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத (கல்வி,வயது,இனசுழற்சி)விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.
- தகுதியில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
- காலதாமதமாக வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் பரிசீலிக்கப்படமாட்டாது.
- எந்த ஒரு விண்ணப்பத்தையும் நிராகரிக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு.
அலுவலக உதவியாளர் நிபந்தனைகள்:
- தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தினை www.dharmapuri.tn.nic.in இணையதளத்திலும் தேசிய தொழில் நெறி வழிகாட்டு மைய இணையதளத்திலும் (National Career Service Portal) www.ncs.gov.in உள்ள விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும்.
- இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, 13.11.2023 முதல் 21.11.2023 வரை அலுவலக வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 05.45 மணி வரை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி), மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (வளர்ச்சிப் பிரிவு), இரண்டாவது தளம், தருமபுரி – 636 705 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பப்பட வேண்டும்.
- இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தில் உள்ள விவரங்கள் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத (கல்வி,வயது,இனசுழற்சி) விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.
- தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முக தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்து நேர்காணல் கடிதம் (Call Letter) பின்னர் அனுப்பி வைக்கப்படும்.
- தகுதியில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
- காலதாமதமாக வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் பரிசீலிக்கப்படமாட்டாது.
- எந்த ஒரு விண்ணப்பத்தையும் நிராகரிக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு.
குறிப்பு:
- விண்ணப்பக் கட்டணம் ஏதும் இல்லை.
- விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தை அனுப்பும் முன் விளம்பரத்தை கவனமாகப் படிக்க வேண்டும்.
- தகுதியற்ற விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.