குளிர்காலத்தை சமாளிக்க சூப்பரான டிப்ஸ்..!

To Manage Winter Session Tips For Tamil

ஆண்டுக்கு ஒரு முறை பருவநிலை மாற்றம் நிகழ்வது வழக்கம். இந்த கால கட்டத்தில் பருவநிலையை தீர்மானிப்பது சற்றும் கடினமான ஒன்று. இந்த ஆண்டிற்கான குளிர்காலம் தற்பொழுது தொடங்கியுள்ளது. இந்த ஆண்டில் குளிர் சற்று அதிகமாகவே உள்ளது. குளிர் காலம் என்றால் சிறிய பயம் வந்துவிடும். ஏனென்றால் குளிர்காலத்தில் உடல் பாதிப்புகள் அதிகம் ஏற்படும் என்ற அச்சம் வரும். குளிர் காலத்தில் உடலின் நலனை கூடுதல் கவனம் எடுத்து தற்காத்து கொள்ள வேண்டும். இந்த அச்சத்தை தவிர்ப்பது எப்படி என்று பார்ப்போம்.

குளிர்காலத்தை சமாளிக்க சூப்பரான டிப்ஸ்..!

உடற்பயற்சி செய்தல்:

Exercising

குளிர் காலம் என்றால் அதிகாலையில் எழுவது என்ற பழக்கம் மறந்துவிடும். அதிலும் நடைபயிற்சி செய்வது என்பது நினைவில் எட்டாத உயரத்தில் போய்விடும். நமக்கு ஓடுவது நடப்பது என்பது பிடித்தமான ஒன்றாக இருந்தாலும் அவற்றை குளிர் காலத்தில் செய்வது கடினமான ஒன்று. குளிர் காலத்தில் பனியின் தாக்கம் சற்றும் அதிகமாகவே இருக்கும். பனி பொலிவு குறையும் வரை உடற்பயற்சியை உடற்பயிற்சி கூடத்திலே செய்யலாம். என்ன தான் குளிர் காலம் என்றாலும் நமது ஆரோக்கியம் என்பது மிகவும் அவசியம் என்பதால் உடற்பயிற்சியை தினம்தோறும் வழக்கமாக்கி கொள்ள வேண்டும். என்ன தான் உடற்பயிற்சி செய்தாலும் அதனுடன் ஆரோக்கியமான உணவு பழக்கம், போதுமான தூக்கம் போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும்.

கைகளை சுத்தமாக வைத்தல்:

Keeping hands clean

பொதுவாகவே நமது உடலை சுத்தமாக வைத்து கொள்வது ஆரோக்கியமான ஒன்று. குளிர் காலத்தில் அதிகமான நோய் பாதிப்பு ஏற்படும் என்பதால் நமது சுத்தத்தில் கவனம் தேவை. குளிர் காலத்தில் நமது நேரத்தை அதிகம் அறையின் உள்ளே போக்குவதால் நோய் கிருமிகளின் தாக்கம் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. வெளியில் சென்று வந்த உடன் கைகளை நன்கு சோப்பு போட்டு கழுவ வேண்டும். குளிர் காலத்தில் அடிக்கடி கையை கழுவுவதால் நோய் தோற்று போன்றவற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள முடியும். இதை குளிர் காலத்தில் மட்டும் கடைபிடிக்காமல் நமது அன்றாட வழக்கத்தில் ஒன்றாக இருந்தால் நம் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

ALSO READ >குளிர்கால நோயிகளிலிருந்து நம்மை தற்காத்து கொள்ள உதவும் ஓர் அற்புத மருந்து இதோ..

ஆரோக்கியாமான உணவு முறைகள்:

Healthy eating habits

எந்த ஒரு காலநிலையாக இருந்தாலும் உணவு வழக்கம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான உணவை ஆரோக்கியமானதாக உண்ண வேண்டும். அதுவும் குளிர்காலத்தில் எப்படிப்பட்ட உணவை சாப்பிடுகிறோம் என்பது தான் ஆரோக்கியத்தை முடிவு செய்கிறது. இந்த குளிர் காலத்தில் அதிகம் வெளியில் செல்லாமல் வீட்டில் இருப்போம் என்பதால் அதிக கலோரிகள் சேர்ந்துவிடும். இதானால் தான் கொழுப்பு சத்து, மாவு சத்து உள்ள பொருட்களை தவிர்க்க வேண்டும் என்கிறோம். இதற்கு மாற்றாக பழங்கள் மற்றும் பச்சை காய்கறிகள் போன்றவற்றை சாப்பிட வேண்டும். எப்படி பட்ட உணவை உண்கிறோம் என்பது முக்கியம். ஊட்டச்சத்து அதிகம் உள்ள உணவை தேர்வு செய்து உண்ணும் போது அது நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும். எதிர்ப்பு சக்தி மூலம் குளிர் காலத்தை எதிர்த்து போராட முடியும்.

போதுமான தூக்கம் வேண்டும்:

Get enough sleep

தினம்தோறும் நாம் 7 அல்லது 8 மணி நேரம் தூக்கம் மேற்கொள்ளும்பொழுது உடல்நிலை நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும். போதுமான தூக்கம் கொள்ளும் போது நமது உடல் நிலை மிகவும் ஆரோக்கியமாகவும், அனைத்து செயல்பாடுகளும் சீராக செயல்படும். நீங்கள் மிகவும் சோர்வாக உணரும் பொழுது கூடுதல் தூக்கம் கொள்ள வேண்டும். குளிர் காலத்தில் உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ளவதற்கு போதுமான தூக்கம் முக்கியம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எவ்வளவு நேரம் தூக்கம் வேண்டும் என்னும் வரையறை உள்ளது. அதற்காக தான் அவற்றை அட்டவணை படுத்தி உள்ளோம்.

ALSO READ >தலையில் பொடுகா? எண்ணெய் வைக்கணுமா? வைக்க கூடாதா?


ஒவ்வொரு வயதினரும் எடுத்து கொள்ள வேண்டிய தூக்க நேரம்

1. குழந்தைகள் (0-3 மாதங்கள்) – 14 to 17 மணிநேரம்

2. குழந்தைகள் (4-11 மாதங்கள்) – 12 to 15 மணிநேரம்

3. குழந்தை (1-2 வயது) – 11 to 14 மணிநேரம்

4. குழந்தை (3-5 வயது) – 10 to 13 மணிநேரம்

5. பள்ளி வயதினர் (6-13 வயது) – 9 to 11 மணிநேரம்

6. பதின் பருவத்தினர்கள் (14-17 வயது) – 8 to 10 மணிநேரம்

7. இளம்வயதினர் (18-25 வயது) – 7 to 9 மணிநேரம்

8. பெரியவர்கள் (26-64 வயது) – 7 to 9 மணிநேரம்

9. முதியவர்கள் (65 வயதிற்கு மேல் உள்ளவர்கள்) – 7 to 8 மணிநேரம்

மேற்கண்டவற்றை நடைமுறை படுத்துவதன் மூலம் குளிர்காலத்தை கூட ஆனந்தமாக வாழ முடியும்.


RECENT POSTS IN JOBSTAMIL.IN

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here