கல்லூரியில் சேரப்போகும் மாணவர்களின் கவனத்திற்கு…. இன்று முக்கிய அறிவிப்பு வெளியீடு!

To the attention of the students who are going to join the college Today the important announcement is released just now read immediately

தமிழ்நாட்டில் சுமார் 460 க்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகளானது அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்குகின்றது. இந்தக் கல்லூரிகளில் ஏறக்குறைய 1.5 லட்சம் இடங்களானது இளநிலைப்படிப்புகளில் இருக்கின்றன. இந்த இடங்களை ஒற்றைச்சாளர முறையில் வருடந்தோறும் இந்த பொறியியல் கல்லூரிகள் அனைத்திலும் பொது கலந்தாய்வு வாயிலாக நிரப்பப்படுகின்றது.

இதனையடுத்து வருகிற ஜூலை-2 முதல் தொழில் நுட்பக் கல்வி இயக்குநரகத்தால் இந்த வருடத்திற்கான பொறியியல் கலந்தாய்வானது ஆன்லைன் மூலமாக நடத்தப்பட இருக்கிறது. அதைத்தொடர்ந்து சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வானது ஜூலை 2-ந்தேதி முதல் 5-ந்தேதி வரையும், பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வானது ஜூலை-7 முதல் ஆகஸ்ட் 24 வரையும் நடைபெறுகிறது. மேலும் கடந்த மே-5 ஆம் தேதி தொடங்கி ஜூன்-05 (அதாவது நேற்று) வரைக்கும் பொறியியல் படிப்புகளுக்கான இணையதள விண்ணப்பப் பதிவானது நடந்து முடிந்தன. அதையடுத்து தமிழகமெங்கும் மொத்தம் 2,29,167 மாணவர்கள் இப்படிப்புகளில் சேருவதற்காக விண்ணப்பம் செய்துள்ளனர். மேலும் கடந்த ஆண்டைவிட இந்த வருடத்தின்போது கூடுதளுடன் 18,174 பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள்.

இதற்கிடையே இன்று(செவ்வாய்) பொறியியல் படிப்புகளில் விண்ணப்பித்த மாணவர்களுக்கான ரேண்டம் எண் வெளியாகிறது. மேலும் மாணவர்கள் இணையதளத்தில் ஒவ்வொரு மாணவர்களுக்கான உருவாக்கப்பட்ட ரேண்டம் எண்ணை பார்க்கலாம். இந்த எண்ணின் மூலமாக கட் ஆப் ஒன்று போல இருக்கும் மாணவர்களுக்கு முன்னுரிமையானது யாருக்கு அளிக்கப்படும் என்பது முடிவாகும். அதனையடுத்து வரும் 20 ஆம் தேதியின்போது சான்றிதழ்கள் சரிபார்ப்புப் பணிகளும், வரும் 26 ஆம் தேதியன்று மாணவர்களின் தரவரிசை பட்டியலும் வெளியிடப்படுகிறது. அதுமட்டுமல்லாது, கூடுதல் விவரங்களை www.tneaonline.org மற்றும் tndte.gov.in ஆகிய இணைய தளங்கள் வாயிலாக மாணவர்கள் தெரிந்து கொள்ளுமாறு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.


RECENT POSTS IN JOBSTAMIL.IN