ஜி-20 மாநாடு குறித்து ஆலோசிக்க பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்குமாறு 40 கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ள நிலையில்,தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.
இந்த ஜி-20 அமைப்பின் தலைமைப்பொறுப்பு ஒவ்வோர் ஆண்டும் மாறுகிறது. கடந்த ஆண்டு இந்தோனேசியா தலைமை வகித்த நிலையில், கடந்த 1-ம் தேதி ஜி-20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றது.
ஜி-20 மாநாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று (டிசம்பர் 5) மாலை 5 மணிக்கு டெல்லியில் நடைபெற உள்ளது. ஜி- 20 கூட்டமைப்பு விளக்கக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி செல்கிறார். மேலும், இதில் கலந்துகொள்வதற்காக அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (டிசம்பர்5 ) முற்பகல் டெல்லி புறப்பட உள்ளார் என கூறப்படுகிறது.
RECENT POSTS
- NIT Tiruchirappalli Recruitment 2023 – Apply Online for Junior Research Fellow Posts – B.Tech, B.E Required – Apply Now at nitt.edu…
- NIMHANS Recruitment 2023 – Apply Online for Senior Research Officer Jobs | Salary Up to Rs.80,000/-PM/-No Exam Fees | Apply Soon…
- Madras University Recruitment 2023 – Apply Offline for Project Technician-III | Personal Interview Only – Apply at unom.ac.in
- TN ESIC Recruitment 2023 – Walk-in Interview for 6 Senior Resident | Salary Up to Rs.67,700/- Download Application Form Here…
- CMRL Recruitment 2023 – Apply Online for GM, Chief Vigilance Officer Jobs | Salary Up to Rs.2,25,000/-PM…