கங்குவா படப்பிடிப்பில் விபத்து : உயிர் தப்பிய நடிகர் சூர்யா!

Today Cinema News Accident on the set of Ganguwa Actor Suriya survived

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் பட்டியலில் ஒருவராக இருப்பவர் நடிகர் சூர்யா. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இவர் நடித்து வெளியான “ஆறாம் அறிவு” படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. அதன்பின் இவர் நடித்த படங்கள் அனைத்தும் பெரிய அளவில் ஹிட் அடித்தது. இந்நிலையில், சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா “கங்குவா” என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது நடைபெற்று வருகிறது.

ALSO READ : நரிக்குறவராக நடிக்கும் யோகிபாபு… படத்தின் பெயரை போஸ்டராக வெளியிட்ட படக்குழு!!

கங்குவா படத்தில் நடிகர் சூர்யாவுடன் இணைந்து பாலிவுட் நடிகை திஷா பதானி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சண்டைக் காட்சியின் போது 10 அடிக்கு மேல் இருந்த ரோப் கேமரா அறுந்து நடிகர் சூர்யாவின் தோள் பட்டையில் விழுந்ததாவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விபத்தில் நடிகர் சூர்யாவுக்கு லேசானது காயம் மட்டுமே ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விபத்து காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், விபத்து நடந்த இடத்திற்கு போலீசார் சென்று விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top