
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஷால். இவர் நடித்து சமீபத்தில் வெளியான “மார்க் ஆண்டனி” திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தில் நடிகர் விஷாலின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நடிகர் விஷால் நடிக்கும் அடுத்தப் படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது நடைபெற்று வருகிறது.
“விஷால் 34” என்ற தற்காலிகமாக பெயரிடப்பட்ட இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். இப்படத்தினை சாமி, அருள், சிங்கம் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் ஹரி இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிகர் விஷாலுடன் இணைந்து கவுதம் மேனன், சமுத்திரகனி, யோகிபாபு உள்ளிட்ட பல பிரபலங்களும் நடித்து வருகின்றனர். ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் “விஷால் 34” படத்தினை ஜீ ஸ்டுடியோஸ் சவுத் மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரித்து வருகிறது.
ALSO READ : கார்த்திகை முதல் நாள்… மாலை போட்டு விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்!
இந்நிலையில், இப்படத்தில் படப்பிடிப்பு தற்பொழுது வேலூர் கோட்டை அருகே அமைந்துள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலில் நடைபெற்று வருகிறது. இதற்காகஅங்குள்ள கட்டிடம் ஒன்றில் போலீஸ் நிலையம் போல் ஒரு செட் அமைக்கப்பட்டு அங்கு படபிடிப்பு நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக ஜலகண்டேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படாமல் அங்குள்ள காவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டதால் பக்தர்கள் வேதனை தெரிவித்தனர். மேலும், படப்பிடிப்பை காண ஏராளமான மக்கள் குவைந்ததால் அங்குள்ள இடம் முழுவதுமே பரப்பரப்பாக காணப்பட்டது.