பல வருடங்களுக்கு பிறகு இன்று நேருக்கு நேர் மோதும் ரஜினி-கமல் திரைப்படங்கள்..!

Today Cinema News In Tamil Rajini and Kamal movies are re-released today after many years

கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 1995 ஆம் ஆண்டு வெளியான “முத்து” திரைப்படம் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் மீனா, சரத்பாபு, ராதாரவி, ரகுவரன், செந்தில், வடிவேலு உள்ளிட்ட பல பிரபல நடிகர் மற்றும் நடிகைகள் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். இப்படமானது மலையாள படமான “தென்மாவின் கொம்பத்” என்னும் படத்தின் ரீமேக்காக எடுக்கப்பட்ட படம் என்றாலும் ரசிகர்கள் மத்தியில் நீங்க இடம் பெற்றுள்ள படமாக “முத்து” படம் உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள முத்து திரைப்படத்தை டிசம்பர் மாதம் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்போவதாக இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே அறிவித்த நிலையில், இன்று(டிசம்பர் 8) உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் “முத்து” திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

ALSO READ : ரெப்போ வட்டி விகிதம் : சற்றுமுன் ரிசர்வ் வங்கி ஆளுநர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

இந்நிலையில், உலக நாயகன் கமல்ஹாசன் இரட்டை வேடங்களில் நடித்து கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான “ஆளவந்தான்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன் வசூலையும் அள்ளி குவித்துள்ளது. இப்படத்தினை இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கியுள்ளார். இந்த படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து ரவீனா டாண்டன், மனீஷா கொய்ராலா, சரத்பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் தமிழ் மற்றும் இந்தி ஆகிய இரு மொழிகளில் வெளியாகி அதிக வரவேற்பை பெற்றது.

இதனையடுத்து, கமல்ஹாசன் நடித்துள்ள “ஆளவந்தான்” திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான வி கிரியேஷன்ஸ்
என்ற நிறுவனமும் இந்த படத்தை டிசம்பர் மாதம் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக கடந்த மாதம் அறிவித்த நிலையில், ஆளவந்தான் திரைப்படமும் இன்று(டிசம்பர் 8) உலகம் முழுவதிலும் உள்ள திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளது. இரண்டு பிளாக்பஸ்டர் படங்களும் ஒரே நாளில் வெளியிடப்பட்டுள்ளதால் ரஜினி மற்றும் கமல் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top