பாக்ஸ் ஆபிஸை தெரிக்கவிட்ட “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்” திரைப்படம்..! புதிய வீடியோவை வெளியிட்ட படக்குழு!!

Today Cinema News Jigarthanda Double X movie that will show the box office The crew released a new video

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்” என்ற திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு கடந்த 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில், ராகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா, நிமிஷா உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வித்தியாசமான கதைக்களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

ALSO READ : புகழுக்காக சினிமா நடிகைகளை தவறாக சித்தரிப்பது தவறு – கவிஞர் வைரமுத்துவின் அதிரடி பேச்சு

ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான இப்படம் காடுகளைப் பற்றிய புரிதலை மக்களுக்கு உணர்த்தும் வகையில் இருந்தது. அதுமட்டுமல்லாமல், காட்டில் வாழும் பழங்குடியின மக்கள் சந்திக்கும் சிக்கல்கள் எடுத்துரைக்கும் படமாகவும் இந்த படம் இருப்பதால் இன்றளவிலும் திரையரங்குகளில் வெற்றி நடை போடுகிறது. “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்” திரைப்படம் வெளியாகி தற்பொழுது வரை உலக முழுவதும் சுமார் 66 கோடி ரூபாய் வசூலை அள்ளியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனை தொடர்ந்து, இந்த படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக படக்குழு எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு மக்களுக்கு நன்றியை தெரிவித்துள்ளது. அந்த வீடியோவில், இந்த தீபாவளி ஒரு வெற்றிகரமான தீபவளியாக அமைந்தது என்றும் யானைகள் மற்றும் சினிமா மீதான மக்களின் அன்பிற்கு கோடானு கோடி நன்றிகள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top