விரைவில் “மாநாடு 2” திரைப்படம்… இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்ட முக்கிய தகவல்!!

Today Cinema News Manadu 2 movie coming soon Director Venkat Prabhu released important information

தமிழ் சினிமாவில் சிறு வயது முதல் தற்பொழுது வரை பல்வேறு படங்களில் நடித்து வருபவர் நடிகர் சிம்பு. இவர் நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான “மாநாடு” திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி இருந்தார். இந்த படத்தில் நடிகர் சிம்புவுடன் இணைந்து கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, மனோஜ் பாரதிராஜா, பிரேம்ஜி, ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.

ALSO READ : உத்தரகாண்ட் சுரங்க விபத்து : மீட்பு பணியில் களமிறங்கிய இந்திய ராணுவ வீரர்கள்!

சிம்புவின் “மாநாடு” திரைப்படம் வெளியாகி நேற்றுடன் 2 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. இதனை கொண்டாடும் விதமாக நடிகர் சிம்பு எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில், இரண்டு வருட முடிவில்லா காதல் மற்றும் கொண்டாட்டங்கள். இந்த டைம் லூப்பில் மீண்டும் ஒருமுறை வருவது குறித்து எனக்கு எந்த கவலையும் இல்லை. இந்த தலைசிறந்த படைப்பை உருவாக்குவதில் ஈடுபட்ட அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்திருந்தார்.

சிம்புவின் இந்த பதிவிற்கு இயக்குனர் வெங்கட் பிரபு அதே எக்ஸ் தளத்தில் பதிலளித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், “லூப் தொடர்கிறது” என்று பதிவிட்டார். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் “மாநாடு 2” படம் வரப் போகிறாதா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top